இரவினில் வரும் நிலவே
நீ பகலினில் வருவாயா
பகலில் நடக்கும் நிகழ்வுகளை
நீ பார்த்திட விளைவாயா
பகலில் நடக்கும் நிகழ்வுகளை
நீ பார்த்திட விளைவாயா
இயற்கையின் நியதியை
மீறிட நினைப்பாயா
இன்பம் துன்பம் எது
வென்று அறிவாயா
பௌர்ணமி நிலவில்
தாய் மண்ணில் இருந்து
ஊர்க்கதை அளப்பதும்
இனிமேல் நடக்காது
இயந்திர உலகில் பயணிக்கும்
கவனம் முழுவதும் கணனியிலே
இயற்கையை ரசிக்கவும் இயலாது
சிறுவரின் ஆட்டமும் வீதியில் இல்லை
கணினியில் தானே நோட்டம்
ஓடாமல் ஆடாமல் ஒய்ந்து கொண்டார்
ஒரு இடத்தில் நோய்கள் கொண்டவர்
பருத்து விட்டார் பல இடத்தில்
இதை அறியாமல் நீ தூங்கும் போது
வருகின்றாய் விழிக்கும் போது
மறைகின்றாய் எமை வெறுப்பது
போலேன் நடக்கின்றாய்
என் கரங்களிலே உனை ஏந்திடவா
என் மனசை திறந்து பேசிடவா
பரிதியவன் ஒளியினையே இரவல்
பரிதியவன் ஒளியினையே இரவல்
தந்தானா அதை இரவினில் தந்தானா
பகலினில் வந்தால் தன் மவுசு
குறைந்திடும் என்றே பயந்தானா இல்லை
பகலை பார்த்தால் பயந்திடுவாய்
என்று பதுங்கிட சொன்னானா
உன் இளகிய மனசு வெதும்பிடும்
இனிமையானது இரவு தான்
என்றிரவை ஆண்டிட சொன்னானா
காதலர் கண்கள் கலப்பதையும்
கனவினிலே மிதப்பதையும்
கண்டிட சொன்னானா
அமைதியாக உறங்கும்
கண்டிட சொன்னானா
அமைதியாக உறங்கும்
உலகை ரசித்திட சொன்னானா
ஆர்பாட்டம் இல்லாத அலையினையே
அணைத்திட சொன்னானா
பகலவனை நீ பார்த்ததுண்டா
பரிசில்கள் ஏதும் பெற்றதுண்டா
தாமரை மலர்ந்தது கண்டாயா
இளம் துளிர்கள் மிளிர்வதை அறிவாயா
தாமரை மலர்ந்தது கண்டாயா
இளம் துளிர்கள் மிளிர்வதை அறிவாயா
வானத்திலே வண்ணக் கோலம் போடும்
பறவை இனங்கள் கண்டாயா
பொங்கும் கடலில் துள்ளி குதிக்கும்
மீன்வகைகள் நீ பார்த்ததுண்டா
துள்ளி ஓடும் புள்ளி மானின்
மருண்ட கண்கள் கண்டாயா
சூரிய ஒளியில் பட்டு தெறிக்கும்
வானவில்லை நீ கண்டாயா
வறுமையில் சிக்கித் தவிக்கும்
வாழ்க்கைகள் கண்டாயா
பிஞ்சுக் கரங்கள் உழைக்கும்
காட்சி கண்டிட வேண்டாமா
பொம்மைகளை அவர் கண்டதில்லை
பல உண்மைகள் கண்டார்கள்
பந்தாடும் வயதினிலே தினம்
திண்டாடும் கொடுமைகளை
குறைத்திட வேண்டாமா
குற்றம் குறைகள் நலிந்திருக்கே
அதை நிறுத்திட வேண்டாமா
அரசியலும் ஒரு சாக்கடை தான்
அதை அலசிட வேண்டாமா
நீ ஒரு முறை பார்த்தால்
ஒளிந்திடுவாய் மேகத்தின்
மடியில் மறைந்திடுவாய்
வேண்டாம் எமக்கு ஏமாற்றம் நீ
இருக்கும் இடத்தில் இருந்து விடு
நிலவினை கேட்கும் கேள்விகளில்
ReplyDeleteநிஜங்களின் வலிகள் தெறிக்கிறதே
நிலையிலா வாழ்வின் கனவுகளை
சிலைகளால் உணர்ந்திட முடியாதே...!
அருமை அழகு வாழ்த்துக்கள்...!
உண்மை தான் சிலைகளாலும் உணரமுடியாது, விலைக்கும் வாங்கமுடியாது. ஆனால் என்னால் ஓரளவு உணரமுடியுதே, மற்றவர்களுடைய வலியை உணர மனிதாபிமானம் போதுமே. என்ன எழுதி என்ன தலைஎழுத்தை மாற்ற முடியாதே. சீராளன் அவர்களே உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் ரொம்பரொம்ப நன்றி!
ReplyDeleteவித்தியாசமான ஆழமான அருமையான
ReplyDeleteசிந்தனையுடன் கூடிய கவிதை மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
உண்மையாக ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நன்றி ஐயா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை சகோதரி..
ReplyDeleteகற்பனையிலும் பல ஜாலங்கள்
காட்டி காட்சியாய் கவியைத்
தந்த எங்கள் கவியரசிக்கு
வாழ்த்துக்களும் வணக்கங்களும்.. பகிர்வுக்கு நன்றி..
சகோதரா....!
Deleteஉங்கள் வருகை கண்டு இனித்தது உள்ளம்
கருத்தும் கற்பனையை தட்டிவிட்டது
உங்கள் வாழ்த்துக்கள் வானத்தில் மிதக்க விட்டது.மிக்க மகிழ்ச்சி....! என் இனிய சகோதரனுக்கு என் மனம் நிறைத்த வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு நோய் நொடிகளின்றி....!
ஆஹா ஆஹா,
ReplyDeleteசோகமும் சுகமும் இதயமும் படைத்து நீங்கள் படைத்த நிலாவை இப்போது வீட்டுக்கு வெளியே போய் இன்னொரு முறை பார்த்துவிட்டு வந்துதான் பின்னூட்டமிடுகிறேன்.
பரவாயில்லை
அது இருக்கும் இடத்திலேயே விட்டுவிட்டதனால்தானே இன்னொரு முறையும் எங்களுக்கு ஒரு நிலாப்பாட்டுக் கிடைத்தது.
நீங்கள் எல்லாம் மேகம் மறைத்த நிலவாய் இருக்கிறீர்கள்!
எனக்கெல்லாம் இணையம் மூலம் பார்க்கும் வாய்ப்பாவது இருந்தது என்று சந்தோஷப் பட்டுக்கொள்கிறேன்.
நல்ல கவிதை சகோதரி!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!
வணக்கம் சகோ! என் வேண்டுகோளுக்கிணங்கி இக் கவிதையை
Deleteபார்வையிட்டு இனிய கருத்தும் ஈந்தமைக்கு நன்றிகள் பல சகோ தங்கள் வருகையும் வழங்கிய கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியையும் தென்பையும் வழங்கின சகோ! வாழ்க நலமுடன் என்றும் ...!