மனித மனமே கேளு
மயக்கம் என்ன கூறு
கலங்கும் நெஞ்சே ஆறு
இது வாழ்வில் காணும் பேறு
எதுவும் கடந்து போகும்
எண்ணம் கிடந்து வாட்டும்
எதையும் தாங்கும் இதயம்
எளிதில் மறந்து போகும்
மனித வாழ்வும் மரணம் ஆகும்
மடிந்த பின்பும் ஜீவன் வாழும்
ஏழ் பிறப்பும் கடந்து செல்லும்
விதைத்த வினைகள் அறுக்கு மட்டும்
நினைத்து பார்த்தால் சிரிக்க தோன்றும்
புரியாத புதிர் போலவே நோக்கும்
நிம்மதி தேடி அலையும் இருந்த நிம்மதியும்
போகும் இடம்தனை சென்றடையும்
விதி என்று வேதனையில் வாடும்
போராடும் வாழ்வில் நீராட தோன்றும்
வென்று விடத் தவிக்கும் வெட்டிவிடத் துடிக்கும்
தெய்வமதை நிந்திக்கும் கண்டபடி சிந்திக்கும்
இனிமை காண வேண்டின்
இணைத்துப் பார்த்தல் தவிரு
அடுத்தவர் வாழ்வில் பொருளில்
ஆசைகள் கொள்ளாதிரு, அன்பாய் இரு
உயர்பவர் தனை கண்டால் உளமாக வாழ்த்திடு
போட்டி, பொறாமை வாராமல் தடுத்திடும்
எதிரிக்கும் தீங்கு எண்ணாதிரு
இருப்பதை வைத்து செவ்வனே வாழு
தன் மனசை தானே கண்டு பயம் கொள்ளல் நல்லது
செய்வன எல்லாம் உடனே சரியாக
செய்தலும் சிறந்தது எதிர்பார்ப்பு இல்லையேல்
ஏமாற்றம் இல்லையே இவை சிறிதேனும்
நிம்மதி தரும் நிலையில்லா இவ்வுலகில்
ஆழமான கருத்துடன் கூடிய
ReplyDeleteஅருமையான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்
ஆனந்தமாக இருக்கிறது உங்கள் வருகையும் வாழ்த்தும்.மிக்க நன்றி ஐயா.தவறாமல் ஊக்கம் தர வேண்டுகிறேன்.
Deleteமனித மனமே கேளு
ReplyDeleteமயக்கம் என்ன கூறு
கலங்கும் நெஞ்சே ஆறு
இது வாழ்வில் காணும் பேறு
எதுவும் கடந்து போகும்
எண்ணம் கிடந்து வாட்டும்
எதையும் தாங்கும் இதயம்
எளிதில் மறந்து போகும்
இந்த வரிகளில் எங்கேயோ போய்ட்டீங்க
அத்தனையும் முத்துக்கள் ,அருமை இனியா
வாழ்கவளமுடன்...
எங்கே போய் விடபோகிறேன் இந்த வலைக்குள் அல்லவா சிக்கிக் கொண்டேன். உங்களை எல்லாம் விட்டு போகும் உத்தேசம் இல்லை. ரொம்ப ரொம்ப நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும். மிக்க மகிழ்ச்சி.
Deleteஎல்லா நலன்களும் என்றும் கிட்டட்டும்.
அன்பை தேடும் என் பயணங்களில்
Deleteமுகமறியா முத்துக்களே ஏராளம்
எனக்குள் வந்து ஆன்மாவோடு கலக்கின்றன ! நன்றி இனியா
சகோதரரே முன்னர் ப்லொக் கில் பாஷை தெரிவு செய்து டைப் செய்ய வசதியாக இருந்தது. இப்பொழுது அதை காணவில்லை. இது எனக்கு மட்டுமா பலருக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறதா தெரியவில்லை. கொப்பி பேஸ்ட் செய்ய வேண்டியதாக இருக்கிறது. உங்கள் மின்னஞ்சலையும் எங்கேயும் காணவில்லையே....
Deleteசகோதரிக்கு வணக்கம்.
ReplyDeleteதன்னம்பிக்கையை ஊட்டும் தாரக மந்திரங்களாய் தங்களின் கவிவரிகள் மின்னுகிறது. அத்தனையும் அருமை. எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். பகிர்வுக்கு நன்றி..
ரொம்ப நன்றி சகோதரா...!
ReplyDeleteஉண்மையில் சந்தோஷமாக இருக்கிறது சகோதரா.உங்கள் கருத்தும் எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறது.என்றும் உங்கள் வரவை நாடும் அன்புச் சகோதரி.
வாழ்க வளமுடன்...!
அன்பு இனியா,
ReplyDeleteஅழகான கவிதை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
உங்கள் கவிதை வரிகளை நான் எனது படத்திற்கு துணைக்கழைத்துள்ளேன்...இந்தச் சுட்டியில் காண்க.
http://www.vallamai.com/?p=40213
மிக்க நன்றி.
அன்பின் தோழி தேமொழி அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது தங்களுக்கு என்று தெரியவேயில்லை. என் .மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ரொம்ப ரொம்ப நன்றி...! இப்படி ஓர் படம் தான் தேடிக்கொண்டிருந்தேன். எவ்வளவு அருமையாக இலகுவாக வரைந்திருகிரீர்கள். அறிமுகத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும். தொடர்ந்து வருகிறேன். நீங்களும் தொடர்ந்து வாருங்கள் . தொடர வாழ்த்துக்கள் ...!
Deleteவாழ்க வளமுடன்...! இதை அப்படியே காப்பி பண்ணி என்னுடைய வலைத்தளத்தில் இட்டு விடப் பார்க்கிறேன். உங்களுடைய வலைத்தளத்தில் கருத்து இட முடியவில்லை அதனால் இதிலேயே இட்டிருக்கிறேன்.