Friday, September 27, 2013

எல்லை இல்லா

 




எல்லை இல்லா வானம் எங்கும்
ஏணிப்படிகள் இல்லை போலும்
ஏழை நெஞ்சம் ஈழம் எங்கும்
எடுத்து இயம்ப இல்லை தஞ்சம்

ஏற்பதில்லை ஏழை நியாயம்
காக்கவில்லை பெண்ணின் மானம்
எத்தனை இன விரோதம், பதவி மோகம்
எண்ணிலடங்கா உயிர்கள் சேதம்

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற
எண்ணம் கொண்டான் அண்டை அயலான்
எமனாக அரணா பாரதம் புதிரா
எமை காக்க வேண்டும் உயிரா 

எட்டயபுர பாரதிக்கு எட்டவில்லையே
இந்த செய்தி எட்டியிருந்தால் எகிறியே
குதித் திருப்பான் ஏளனம் செய்திருப்பான்
ஏட்டிலே எழுது முழுதும் எடுத்ததை பாடு பரவும்

என்று காணும் இன்ப வாழ்வு
ஏங்கும் நெஞ்சம் வசந்தம் பாடும்
ஏரும் மீளும் ஊரும் வாழும்
வானவில்லும் வந்து போகும்

8 comments:

  1. மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    வேர்ட் வெரிஃபிகேஷனை
    நீக்கினால் பின்னூட்டமிடுவதில் உள்ள
    சிரமம் குறையும்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி ஐயா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். மிகவும் தயக்கத்தோடு தான் இவற்றை வெளியிடுவேன். எப்படி இருக்கிறதோ என்று கவலையாகவும் இருக்கும்.அதிலும் உங்கள் கவிதைகளை பார்த்தால் தயக்கம் அதிகமாகிவிடும். உங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்வையும் தென்பையும் தருகிறது.

      நீங்கள் சொன்னபடி வேட் வேரிபிக் கேஷனை நீக்கிவிட்டேன் ரொம்ப நன்றி
      வாழ்க வளமுடன்

      Delete
  2. என்று காணும் இன்ப வாழ்வு
    ஏங்கும் நெஞ்சம் வசந்தம் பாடும்
    ஏரும் மீளும் ஊரும் வாழும்
    வானவில்லும் வந்து போகும்
    -------------------------------------------------

    இலகு வரிகளிலே
    இனிக்கும் கவிதையிது
    உலகை உறுத்தும் உயிரழிப்பு
    நிலவில்கூட எதிரொலிக்கும்
    நினைக்கவில்லை இன்னும் இந்த
    நிறம் மாறும் அரசாட்சி ...!

    அழகு அருமை ரசித்தேன் இனியா
    மேலும் வளர என் நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரரே உங்கள் வருகையும், கருத்தும், வாழ்த்தும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நம்பிக்கையும் தென்பும் தருகிறது, எனவே நிச்சயமாக வளரும் என்று நம்புகிறேன்.
      எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்!

      Delete

  3. வணக்கம்!

    இனியா எழுதிய எல்லையிலாப் பாடல்
    கனியாய் இனிக்கும் கமழ்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!
      கவிஞரே உங்கள் வருகையும், வாழ்த்தும், கருத்தும் மட்டிலா மகிழ்ச்சியை தருகிறது.ரொம்ப நன்றி!
      வாழ்க வளமுடன்!

      Delete
  4. வணக்கம் சகோதரி.
    நம் சொந்தங்களின் துயர்பாடிய உன்னதமான கவியைத் தந்தமைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவர்களுக்கும் புது விடியல், வானவில் வரட்டும் என்பதே நமது எண்ணம். அருமையான படைப்பு நன்றிகள் சகோதரரே..

    ReplyDelete
    Replies
    1. சகோதரா.......!
      அல்லல் உற்ற நம் உறவுகள் ஆனந்தம் அடைய வேண்டும் விடிவு தோன்ற வேண்டும் என்ற ஆதங்கம் தான். நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும்.
      ரொம்ப நன்றி சகோதரரே...! வரவுக்கும் கருத்துக்கும்.
      வாழ்கவளமுடன்....!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.