Saturday, September 14, 2013

நல்லூர் நாயகனே





 நல்லூர் நாயகனே 
முத்தமிழ் வித்தகனே
வித்தைகள் உனக்கென்ன புதிதா 
விதைத்திடும் விதைகளெல்லாம் 
மெத்திடுமா நின் அருள் 
இன்றி முத்திடுமா இவை புத்தியில் 
உறையாமல் செத்திடுமா 
விதி என்று நதி வழி செல்லாது 
கதி என்று வந்தவரை 
காத்திடும் கருணை தெய்வம்
கந்தா நீ அல்லவா 
சரவணபவ என வாழ்வினில் 
விடிவு தர வந்த வடிவேலா
என் உளம் அறிந்து
  நினைந்து உனை பாடி 
நான் மகிழ கவிதையும் தந்த கதிர்வேலா
இதுவும் கந்தன் கருணை தானா 
வேண்டியதை தருபவனே 
உன்னை தான் பாடுகிறேன்
உன்தனையே வேண்டுகிறேன்
நினைவு தெரிந்த நாள் முதலாய் 
நின்தனையே வணங்கி நின்றேன்
நடை பழகும் போதினிலும் 
உன் தாள் தான் பணிந்து நின்றேன் 
பிஞ்சுக் கரங்களினால் கை 
கூப்பி  நின்றேன் 
இன்று வரை உன் நினைவே 
இறக்கும் வரை வேண்டுகிறேன்
கடல் தாண்டி வந்தாலும் கருணை 
மழை பொழிபவனே உன்னை 
கொண்டாடுவோரை திண்டாட 
வைப்பவனே சிந்தனை திறம் வேண்டும் 
நெஞ்சினில் உரம் வேண்டும் 
நற் பண்புகள் வளர்ந்திட வரம் வேண்டும் 
நிந்திப்பவர் தனை  
நித்திரை கொள்ளவிடு அவர் 
புத்தியில் உறைந்துவிடு
குறைகள் அற்ற வாழ்வு சாத்தியமா 
குற்றம் அற்றவர் யாரும் உண்டா 
குறைகள் பேசுவதில் அர்த்தம் உண்டா 
அனைத்திலும் உண்டு 
நன்மையையும் தீமையும் அறியாரா
நெருப்பும் நன்மை செய்திடுதே 
கருக்கிடும் போது பயம் வருதே 
தென்றல் வீசினால் சுகம் தருதே 
புயலாய் மாறினால் பயங்கரமே
 ஓங்கார நாதனே உதித்திடும் 
என் நெஞ்சினில் உன் கோலமே 
சரணம் சரணம் சண்முகா சரணம் 
நீ வரணும் வரணும் முருகா என்றதும் 
தரணும் தரணும் நின்னருளே
நித்திலம் கொழித்திடவே


7 comments:

  1. வேண்டுதலின் தூய்மையை கவிமூலம் அறிவான்
    நல்லூர் நாயகன் நிச்சயம் அருள்வான்
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம் ரமணி சார்,

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், கொடுக்கும் ஊக்கத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

    ReplyDelete
  3. கவிகொண்டு வாழ்த்துகிறாள் கார்த்திகேயா
    கண்கொண்டு காத்தருள தேடிவாராய்
    புவியாண்டு அருள்பவனே இந்த
    புவனத்தில் இனியாவை மகிழ்விப்பாயே...!

    அருமை அருமை இனியா
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீராளன் அவர்களே,
      வருகைக்கும்,வேண்டுதலுக்கும்,வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி.
      எல்லா நலன்ககளும் கிட்ட நல்லூரன் அருள் புரிவான் என்றும் உமக்கு.
      நீங்கள் சொன்னபடி சொல் சரிபார்கையை நீக்கப் பார்கிறேன்.

      Delete
  5. வணக்கம் சகோதரி.
    \நல்லூர் நாயகனின் திருவருள் அனைவருக்கும் கிடைத்து எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழட்டும். தங்களின் வேண்டுதலுக்கு முத்தமிழ் நாயகனின் நிச்சயம் செவி சாய்த்து அருள்வார்.

    ReplyDelete
  6. சகோதரா...!
    நல்லூர் நாயகன் நலம் பல நல்குவான், நானிலத்தில் நற்புகழ் கிட்டிட நயந்திடுவான் நின்தனுக்கு என்றும்.
    வரவும், கருத்தும், வாழ்த்தும் மனநிறைவைத் தருகிறது. மிக்க மகிழ்ச்சி.

    ரொம்ப நன்றி......! வாழ்க வளமுடன்....!

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.