நீ அழகான முருகன் தான் என்றும்
அதை மறுப்பவர் இங்கு இல்லை யாரும்
நீ இளங் குமரன் தான் என்றும்
அதில் எப்போதும் இல்லை சந்தேகம்.
(நீ )
ஆறுபடை வீடுண்டு முருகா உனைசுற்றி
அழகான குடும்பமும் உண்டு.
அங்கங்கு குடியேற குன்றுஹளும் உண்டு
நல் இதயங்களும் ஏராளம் உண்டு .
இருந்தாலும் ஏன் இங்கு வந்தாய் .
இந்த நல்லுரீல் ஏன் தங்கி நின்றாய் .
அது நல்ல ஊர் என்பதால் தானோ?
(நீ )
ஆறு காலப் பூஜை உனக்காகவில்லையோ ?
அபிசேகம் ஆராதனை செய்யவில்லையோ?
ஆறுமுகம் உனக்குண்டு ஐயா இதில்
பாரா முகம் உனக்கெங்குண்டு ஐயா?
பன்னிரு கரங்கள் உண்டு ஐயா அதில்
ஒன்றேனும் உதவவேன் வரவில்லை ஐயா ?
மக்கள் வேதனை தீர்க்கவே வந்திங்கு உதித்தாய் .
(நீ )
வேலுண்டு வினை தீர்க்க தானே அந்த
வேலுக்கு வேலை ஏன் நீ கொடுக்க மறந்தாய் ?
நீ தேரிலே ஊருலா வந்தாய் நம் ஊர்களை,
நாட்டினை ஏன் காக்க மறந்தாய்.சூரனை
வென்ற சுடர் தானே முருகா நீ எமை
சுட்டெரிக்கும் போது சும்மா ஏன் இருந்தாய்
.இந்த அவலங்கள் யாவும் நீ அறியாயோ முருகா
.(நீ )
கும்பகர்ணனைப்போல தூங்கினாயோ
உனக்கு திருப்பள்ளி எளுச்சியும் கேட்கவில்லையோ
தூங்காதே இன்னும் துயர் கூடும் இங்கே.
தீராத பழியை தேடாதே என்றும்
நீ செய்தாலும் கூட அது பாவம் தானே.
நீ எங்கு போவாய் பாவத்தை தீர்க்க மனிதரைப்
போல பழி தீர்க்க வேண்டாம்.
(நீ )
சீ சீ இதனை எங்கு கற்றுக் கொண்டாய்.
உன் அப்பனா சொன்னது இந்தப் பாடம்.
இயற்கைக்கும் நம் மீது ஏன் இந்த சீற்றம்.
அத்தனை பாவம் செய்ததா நம் பூமி.
உன் திருப்பாதம் பட்டால் தீருமே
அந்தப் பாவம். ஏன் இன்னும் தாமதம்
இன்னுமா தீரவில்லை உன் திருகோபம்.
(நீ )
முருகனுக்கு என்ன கோபமோ! காத்திடுவான் நம்மை முருகன். அதனால்தான் அழகான கவியும் தந்துள்ளானே.
ReplyDeleteஎன்ன கோபம் என்று தான் தெரியவில்லை சகோ! இருந்தாலும் காக்கின்றான் கவியும் தந்தான் என்பதும் உண்மை தான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ .....!
Deleteவாழ்க வளமுடன் ...!
நல்ல கோபம்..
ReplyDeleteஉண்மை தான் தோழி ஆதங்கத்தை கொட்டி விட்டேன் .
Deleteமிக்க நன்றி தோழி ! வருகைக்கும் கருத்துக்கும்.