Sunday, January 13, 2013

அன்னைய ரின் துயரம்

அன்னையர்கள் செய்த தியாகம் கொஞ்சமோ
அவர் அணிந்த்திருகும் தாலி என்ன சின்னமோ
அவர் அடி வயிறு நொந்ததென்ன உண்மையோ
அடிமை வாழ்கை பெண்களுக்கு தேவையோ
அவர்கள் அர்த்தநாரிஸ்வரர் இல்லையோ
( அன்னை )
அன்பில்லாத கணவனிடம் தஞ்சமோ
அவரை ஆட்டிபடைக்கும் அந்த நெஞ்சமோ இருந்தும்
அவர் அன்புக்கு இல்லையே என்றும் பஞ்சமே
அவர் விட்ட கண்ணீர் உனக்கு வெல்லமோ
வாழ்கை இது வாழ்வதற்கு இல்லையோ
(அன்னை)
அதில் நீர் என்றும் விளையாடல் ஆகுமோ
இந்த நிலை இன்னும் எங்கும் தொடருமோ
இந்த முனேற்ற நாட்களிலும் வளருமோ
பிதாமஹர்கள் மனம் வைத்தல் மாறுமே
இதற்கு முற்றுபுள்ளி வைத்துவிடல் வேண்டுமே
(அன்னை )
ஈருடல் ஒருயிராய் வாழவேண்டும் அல்லவோ
அன்பு தனை சொரிந்து விட்டால் துன்பமோ
நல்ல சந்ததிகள் பெருக வேண்டுமல்லவோ
பொருளை விட புகழை விட நிம்மதி தான் வேண்டும் அல்லவோ
அதை விலை கொடுத்து யாரும் வாங்கிடலாமா.
(அன்னை )

4 comments:

  1. அன்னையை பற்றி அழகான கவிதையை பிள்ளையார்சுழி போட்டு எழுத ஆரம்பித்துள்ளீர்கள். இது எந்நாளும் மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும். இது வரை யாரும் பார்க்கவில்லயே என்ற வருத்தம் நீங்கிவிட்டது ஹா ஹா ...
      வாழ்க வளமுடன் ..!

      Delete
  2. //ஈருடல் ஒருயிராய் வாழவேண்டும் அல்லவோ
    அன்பு தனை சொரிந்து விட்டால் துன்பமோ
    நல்ல சந்ததிகள் பெருக வேண்டுமல்லவோ//
    மிக அருமை தோழி..இந்தக் கருப்பொருளில் நான் இதுவரை ஒரு கவிதையும் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்...ஆண்கள் மனைவியை அன்போடு சரிநிகராக மதிப்புக்கொடுத்து வாழ்ந்தாலே பிள்ளைகளும் அவ்வழி நடப்பர்....வாழ்த்துகள் தோழி!
    உங்கள் பழைய பதிவுகளைப் படிக்கலாம் என்று எண்ணி இங்கு வந்தேன்...நல்லதாகப் போயிற்று... :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா என் பழைய பதிவுகளை படிக்க வென்றே வந்தீர்களா தோழி வந்ததில் அளவு கடந்த மகிழ்ச்சியே உண்மையில் நெகிழ்கிறேன்.
      மிக்க நன்றிம்மா ! வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன் ....!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.