Saturday, September 5, 2015

கொத்துமலர் பூங்கொடியே

Image result for சரஸ்வதி images gif

 பட உதவிக்கு  நன்றி  google  

வாமகளே வாணியளே வல்லதமிழ் தந்துதவ
      வந்திடுவாய் எந்தனக வீடு !
            வண்ணமகள் வந்துனது வல்லமையைக் காட்டியெனை
                 வாழ்வுயர தந்திடுவாய் ஏடு!

தாமதமாய் வந்துதித்தால் தாயுனைநான் ! நொந்திடுவேன் 
      தங்கமகள்  வந்தெனையே நாடு !
           சாமரையும்  வீசிடுவேன் பாமறையும் தீட்டிடுவேன்
              சந்தமுடன் சிந்திசையை சூடு !

கோமகளே குன்றிணொளி கொண்டிருக்கும் குற்றமிலாக் 
       கோமளமே நீயணிந்த தோடு!
            கொத்துமலர் பூங்கொடியே கோலமுடன் சீர்தருவேன்
                கூவுகுயில் போலிசைத்துப் பாடு !

தாமரையில் வீற்றிருக்கும் நாமரையின் நாயகியே
     தந்திட ..வா தண்டமிழர் நாடு !
          தையலெனைக் கண்டதுமே தாவியணைத் தூக்கிடுவாய்
               தந்ததன தாளநடை போடு! !

34 comments:

  1. அருமை
    தாமரையில் வீற்றிருக்கும் நாயகி தந்திடுவார்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  2. கோமகளே குன்றிணொளி கொண்டிருக்கும் குற்றமிலாக்
    கோமளமே நீயணிந்த தோடு!
    கொத்துமலர் பூங்கொடியே கோலமுடன் சீர்தருவேன்
    கூவுகுயில் போலிசைத்துப் பாடு!..

    அழகான சந்தத்துடன் மனம் கவர்கின்றது..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  3. அதுதான் ஏற்கனவே வந்து கொலுவீற்றிருக்கிறாளே. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  4. இந்தப்பாட்டுக்காகவே இன்னொரு பாவலர் பட்டம் தங்களுக்குத் தரலாம்.

    அற்புதம். ஆனந்தம். அத்விதீயம்.

    நாமகளை வெகு சிறப்பாகப் பாடிடவும் சரஸ்வதியின் அருள் .வேண்டும்.
    அது உங்களுக்கு வேண்டியது கிடைத்து இருக்கிறது.

    வாழ்க.

    இன்னும் சற்று நேரத்தில் எனது வலையில் உங்கள் பாடல் ஒலிக்கும்.
    ராகம். ஹம்சத்வனி.

    சுப்பு தாத்தா
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தாத்தா! நேரமின்மை காரணமாக தற்போது கேட்க முடியவில்லை கேட்டு விட்டு கருத்து இடுகிறேன்.

      Delete
    2. தங்கள் இசையில் என் பாடலை இதயம் குளிர கேட்டு ரசித்தேன் தாத்தா மிக்க நன்றி ! வாணியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் தாத்தா. நிச்சயம் தங்களுக்கும் உண்டு. மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் ...!

      Delete
  5. ஆகா!.. என்ன இனிமை!
    மெய்மறந்து ரசித்தேன் தோழி!

    வாணியவள் வந்துமக்கு நல்லவரம் தந்திடுவாள்!
    ஏணிதனில் நீவிரைந்து ஏறு!

    உங்கள் மரபுக்கவிதைப் படைப்புகள்
    மனம் கவருகின்றன!
    சந்தம் மிக அழகு! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாணியவள் வந்துனக்கு நல்லவரம் தந்திடுவாள்!
      ஏணிதனில் நீவிரைந்து ஏறு!

      எனத் திருத்தம் செய்துள்ளேன்! ஏற்றுக்கொள்க!

      Delete
    2. வாங்கம்மா தங்களின் இனிய கருத்திணை உண்டு மகிழ்ந்தேன்.
      பா படைக்கும் ஆற்றல் பொருந்திய தங்கள் வாழ்த்து என்றும் எனக்கு உரம் செய்யும்.
      நாவுக் கரசியின் அத்தனை கடாட்சமும் பெற்றவர் தாங்கள் தங்கள் வருகையே என் பாக்கியம். மேலும் சகல வல்லமையும் அளிப்பாள் மிகவே. நன்றிம்மா வாழ்த்துக்கள் ...!

      Delete
  6. வாய்விட்டுப் பாடி இரசித்தேன்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் ரசித்தமைக்கும். வாழ்க வளமுடன் ...!

      Delete
  7. அருமை அருமை!

    இப்படி எலாம் எனை அழைத்திட்டால்
    எப்படி நான் வாரா திருப்பேன்
    இனிய மகளே உன் அகத்திற்குள்
    இனிதாய் வந்தமர்ந் திடேனோ!!!

    என்று நாவுக்கரசி வாணியவள் சொல்லுவது கேட்கவில்லையா சகோதரி!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா .... அப்படியா சொல்கிறீர்கள் சகோ ! வந்திடுவாள் இல்ல சகோ நிச்சயமா ! உங்கள் வாக்கு பலிக்கட்டும் சகோ மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கள் ...!

      Delete
  8. கோமகளே சந்தத்தில் இசைத்த பாக்கள்
    கண்டு கோவில் வாழ்தெய்வம் குழைந்தே
    வரும், உன்எழுத்து வடிவழகில் சொக்கியே
    வசந்தத்தை வழங்கு வார்
    அருமையாக இருக்கும்மா, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா பேராசிரியரே என்னாச்சு இப்போ எல்லாம் பதிவுகளைக் காணோமே. நாம் எல்லாம் எதிர்ப்பார்போம் இல்ல ம்..ம் சீக்கிரம் ஆகட்டும் ஆகட்டும் ஹா ஹா ... நன்றிம்மா இனிய கருத்து ஈந்து எனை வாழ்த்தியமைக்கு நன்றி வாழ்க வளமுடன் ...! தாங்களும் முயற்சி செய்யுங்கள் தளாராது ok வா ....

      Delete
  9. அருமை சகோ ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்திற்கும்.

      Delete
  10. ஆகா! லேட்டா வந்தா திட்டுவீங்களா? :-)
    அருமை தோழி

    ReplyDelete
    Replies
    1. ம்..ம் .. அப்புறம் திட்டாம என்ன செய்யட்டும் அன்பானவங்க பிந்தி வந்தா அழுகை வராதா ......ம்..ம் இந்த முறை மன்னிச்சுட்டேன், ok வா சமத்தா அடுத்தமுறை ஓடி வந்திடனும் ok வா .... அது புரியுதும்மா நான் சும்மா வெருட்டினேன் நேரம் கிடைக்கும் போது வாருங்கள் ஆனா வந்திடனும் ok வா ...நன்றிம்மா வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  11. அன்புள்ள சகோதரி,

    கமலத்தில் வீற்றிருக்கும் கலைவாணி தந்திடுவாள்
       கவனத்தில் கொண்டிடுவாள் பாடு
          காவியமாய்ப் படைத்திடுவாய் கண்ணிகளைத் தீட்டிடுவாய்
             காலமகள் கைகொடுப்பாள் பாரு.

    சந்தத்தில் பாடிய கவிதை சிந்தையில் இனித்தது.
    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. wow சகோ இப்படி அசத்திட்டீங்களே இப்படி பாடல் மூலம் வாழ்த்தி கருத்து இட்டால் எத்தனை பாட்டும் எழுதலாமே. அவ்வளவு தென்பு வருகிறது சகோ நன்றி நன்றி! வாழ்த்துக்கள் ...!

      Delete
  12. வணக்கம்
    அம்மா
    கலைவாணி பற்றி நற் கவி படைத்திட்ட தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! ரூபன் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  13. சந்த நயம் மயக்குகிறது. இனியாவின் இன்னொரு இனிய கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் இனிய கருத்துக்கும்.

      Delete
  14. சந்தங்கள் இனி இனியாவின் வசமே சங்கமித்தது போன்றதொரு உணர்வு. வாழ்த்துகள்! வாழ்த்துகள்! கலக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. அட நம்ம சந்தராணியே நீங்கள் தான் நீங்களே இப்படி சொன்னால் நான் என்ன செய்வதும்மா எல்லாம் உங்களைப் போன்றோர் தயவே நன்றிம்மா வாழ்த்துக்கள்

      Delete
  15. தாமரை அன்னைக்கு அழகான கவிதை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்திற்கும்.

      Delete
  16. நாமகளின் அருள் முழுமையாக உங்களுக்கு இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்திற்கும்.

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.