Saturday, March 28, 2015

காற்றினில் கலந்தென் மூச்சினில் வரணும்



சாயி நாதா சரணம் சரணம்
சாயி நாதா சரணம் சரணம்
நின்சக்தி தனையே உணர்ந்திடும் நேரம்
நின்னருளினை எமக்கு அளித்திடு போதும் 

கண்களில் உள்ள கருணை தன்னை
காட்டிட வேண்டும் காலம் முழுதும்
எண்ணத்தில் மிதந்து எளிதினில் கடந்து
இறையன்பினை அடைந்திட அருளிடு சாயி

சங்கடம் தீர்த்திட சடுதியில் வரணும்
சர்வமும் நீயென சங்கே முழங்க
பொங்கிடும் மங்கலம் புரிதலும் தரணும்
பூவினில் அமைதி காத்திட வரணும்

வெற்றிப் பாதை காட்டி எம்மை 
வீழ்ந்தி டாமல்  அரவணை ப்பாயே 
பற்றிப் படர கொழு கொம்பாக 
பக்கம் நின்றே பணிசெய் வாயே

ஆற்றினைப்போல் நல்லெழி லினைத் தரணும் 
அற்றுப் போகா நிலைதனை விடணும்
தோற்றுப் போகத் தோன்றும்  நிலைமை
தொடர்ந்தி டாமல் தடைசெய் திடணும்   

காற்றினில் கலந்தென் மூச்சினில் வரணும்
கவலைகள் யாவும் கரைந்திட விடணும்
ஆற்றலை  வளர்த்து ஆறுதல் தரணும்
அல்லல்கள் அலறி ஓடிட வேண்டும்

உற்று நோக்கி உன்னத நிலையை 
உருவாக்கிடு போதும் உலகினில் நிலையாய்
பெற்றவர் களிப்புற அருளிடுவாயே நித்தியமாய்  
புறம்பேசி புண்ணாக்கும் நிலைஅருகிடவேண்டும் சத்தியமாய் 

குற்றங் குறைகள் குறுகிட அருள்வாய் 
குலவிளக்குகள் எங்கும் ஒளிர்ந்திட வருவாய்
ஊற்றெ டுக்குமன் புள்ளங்கள் 
உறையா  வண்ணம் காப்பாய்

சீற்றங்க ளின்றி சிரித்திட வேண்டும்
சிந்தனை  யாவும் சிறந்திட வேண்டும்
போற்றியே  உம்மை புகழ்ந்திட வேண்டும்
புண்ணியம் யாவும் சேர்ந்திட வேண்டும்

பற்றுப் பாசம் அகன்றிட வேண்டும்  நின்
பதமே துணை யென்றாகிட  வேண்டும்
சுற்றம் யாவும்  சூழ்ந்திட வேண்டும்
சுகங்கள் யாவும் சேர்ந்திட வேண்டும்

சிற்றறிவுகள் யாவும் சிதைந்திட வேண்டும்
சுதந்திர உணர்வுகள் பெருகிட வேண்டும்
கற்றவர் நிழலினில் ஒதுங்கிட வேண்டும்
காலங்கள் கைவசம் கனிந்திட வேண்டும் 

பெற்றாலிவை  பெரும் பேறே சாயி  
கொற்ற வனேஎமை காத்திடும் சாயி
சாயி சரணம்  சாயியே சரணம்
சாயி சரணம் சாயியே சரணம்



 


 





22 comments:

  1. அருமையான கவி சகோ... வேண்டுதல் நிறைவேறிடும் விரைவில்.
    தமிழ் மணம் இணைக்க முடியவில்லையே...?
    சாயி நாதா சரணம் சரணம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அப்பா இவ்வளவு வேகமா வந்து கருத்திட்டதற்கு நன்றி !அதன் ரகசியத்தை எனக்கும் சொன்னால் உதவியாக இரு...க்குமே சகோ ! என்ன சொல்லித் தரமாட்டீங்களா இது தானே வேணாங்கிறது. இதெல்லாம் நல்லது இல்லை சொல்லிட்டேன். ஆமா த + மா இனக்க முடியலை ஏனோ தெரியலை சகோ!சாயி அருள் கிட்டட்டும் அனைவர்க்கும்.

      Delete
    3. blogspot.in to blogspot.com இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...!

      http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

      Delete
    4. Blog Address

      kaviyakavi.blogspot.com
      Edit

      + Set up a third-party URL for your blog - Point your own registered URL to your blog.

      இப்படித் தானே சகோ இருக்கிறது.

      Delete
    5. நாங்களெல்லாம் 6 மாசத்துக்கு ஒருமுறை பதிவுக்கு வர மாட்டோம்.

      Delete

  2. ***சிற்றறிவுகள் யாவும் சிதைந்திட வேண்டும்***

    எனக்கெல்லாம் பேறிவெல்லாம் இல்லை... சிற்றறிவுதான் இருக்கு. அதையும் சிதைத்துவிட வேண்டுவது நியாயமா, இனியா? :)))

    ReplyDelete
    Replies
    1. வாங்க வருண் இவ்வளவு தன்னடக்கம் எல்லாம் ஆகாதுப்பா. எனக்கு மட்டுமா ஊருக்கே தெரியுமே வருணுக்கு எல்லா விடயங்களும் அத்துபடி என்று அக்குவேற ஆணிவேறயா புட்டுப் புட்டு வைக்கிறது உண்மையில் ஆச்சரியப் பட வைக்கும் அளவுக்கு உங்களுக்கு அறிவு உள்ளது. கேட்டா இல்ல என்கிறது இது மட்டும் ஞாயமா. சிற்றறிவு என்பது தீமை பயப்பன அது தான் உங்களுக்கு எள்ளளவும் இல்லையே ஹா ஹா .....
      நன்றி வருகைக்கும் கருத்துக்கும். மீண்டும் வலையில் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சியே.

      Delete
  3. வணக்கம்
    அம்மா
    சாயி பற்றி பாடிய பாடல் நன்றாக உள்ளது...நானும் பாடி மகிழ்ந்தேன் தங்களின் ஒவ்வொரு வெற்றிக்கும் சாயி துணை... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிரூபன் ! வருகைக்கும் கருத்துக்கும் ...!

      Delete
  4. எதற்கும் மனது திருப்தி பட வேண்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்வது தெரியாமலா சொன்னார்கள் மனித மனம் ஒரு குரங்கு தானே என்று என்ன செய்வது திருப்தியடைந்தால் தெய்வமாகி விடுவார்களே அனைவரும். எந்த ஜென்மத்தில் ஆவது சாத்தியமாகுமா இது தெரியலை. நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  5. Replies
    1. வாங்க சகோ நலம் தானே, மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  6. வணக்கம் .
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாயி பற்றிய பாடல்.
    நிச்சயமாய்ச் சுப்புத்தாத்தாவின் குரலில் இதை யு டியுபில் விரைவி்ல் கேட்பேன் என்றே நினைக்கிறேன்.
    “சீற்றங்கள் இன்றி சிரித்திட வேண்டும்
    சிந்தனை யாவும் சிறந்திட வேண்டும் “
    என்ற வரிகள் உங்களை நினைவூட்டுகின்றன. அருமை.
    தமிழ் மணத்தில் இணைக்க திண்டுக்கல் தனபாலன் அவர்களை மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளுங்கள்.
    ஆவன செய்வார்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க viju வரிகள் தான் நினைவூட்டினவா அப்போ இவ்வளவு நாள் இடைவெளியில் என்னை எல்லோரும் மறந்திருப்பார்கள் போல் அல்லவா இருக்கிறது தாங்கள் உட்பட ம்..ம்.. இதுசரியில்லை சொல்லிட்டேன்.
      .
      \\\\தமிழ் மணத்தில் இணைக்க திண்டுக்கல் தனபாலன் அவர்களை மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளுங்கள்.
      ஆவன செய்வார்.//// அப்படியே ஆகட்டும் முயற்சி செய்கிறேன்.
      மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும். மீண்டும் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியே.

      Delete
  7. அருமையான சாய் பாடல் சகோ...
    நீண்ட நாட்கள் ஆகிவிட்டனவே... சகோ

    ReplyDelete
  8. அருமையான வரிகள்! சகோதரி! சாய்நாதா சரணம்!!! சரணம்!!!!

    (உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வரும் எங்கள் தளத்திலிருந்து!!!!)

    ReplyDelete
  9. அருமையான வரிகள் சகோதரி! சாயிநாதா சரணம்!!! சாயிநாதா சரணம்!!!

    (உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வரலாம் எங்கள் தளத்திலிருந்து....!!)

    ReplyDelete
  10. //பொங்கிடும் மங்கலம் புரிதலும் தரணும்
    பூவினில் அமைதி காத்திட வரணும்!..//

    சாயிநாதா சரணம்.. சரணம்..
    சற்குருநாதா சரணம்.. சரணம்!..

    ReplyDelete
  11. சிற்றறிவுகள் யாவும் சிதைந்திட வேண்டும்
    சுதந்திர உணர்வுகள் பெருகிட வேண்டும்
    கற்றவர் நிழலினில் ஒதுங்கிட வேண்டும்
    காலங்கள் கைவசம் கனிந்திட வேண்டும்
    அருமையான வரிகள், இனியா எங்கே என் பக்கம் காணோம்,,,,,,,,,,,,

    ReplyDelete
  12. காற்றினில் கலந்தென் மூச்சினில் வரனும்.. ..!! ம்ம்ம்..எப்படித்தான் யோசிக்கிறாங்களோ!! அருமை..
    ஆமா! நலம்தானே?

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.