Friday, February 27, 2015

துணையை தேடி நான் தொலைந்தும் போகேன்

Thanks for the image
 கைகள்  கோர்த்து 
காலம் முழுவதும் 
 கண்ணுக்குள்ளேயே 
இருந்து விடலாமா
நேரம் போவது தெரியாமல் 
பெண்ணுக்குள் தோன்றும் புதிராய்
மண்ணுக்குள் தோன்றும் மரமாய்
விண்ணுக்குள் தோன்றும் வரமாய்.
பண்ணு க்குள் தோன்றும் பரவசமாய்.

RESİMLER
Thanks for the image
நீ எனைத் தாங்க
நானும் உனைத் தாங்குவேன் 
என் உள்ளங்கையில் வைத்து
உயிரிலும் மேலாய் என் உயிர் 
உள்ளவரை உலகே

Graphics » Christmas birds Graphics
Thanks for the image
.

 மோதிப் பார்ப்பதால்  பாதிப்பு தான் அதிகம்
வாதிக்காமல் வாழ்க்கையை வென்றிடலாமே
பூரிக்கும் படியாய்
நாம் என்ன மனிதர்களா 
மாற்றிப் பேசி மனம் நோக வைக்க 
என்ன நான் சொல்றது

.
Thanks for the image

பனியில் நனைந்தாலும்
துளியும் நிறம் மாறேன்
தனியே  கிடந்தாலும்
தளர்ந்து நான் போகேன் 
துணையை தேடி நான் 
தொலைந்தும்  போகேன்
(என்கிறது இந்த சிவப்பு ரோஜா ) 


வலையுறவுகளுக்கு வணக்கம் தயவு செய்து மன்னிக்கவும் நான் மீண்டும் வரும் வரை எனை மறவாதிருக்க இது ம்..ம்.. அப்புறம் புதிய நபர் என்றல்லவா எண்ணுவீர்கள் அது தான். நன்றி ! 
யாரு முணுமுணுக்கிறது. திட்டாதீங்கப்பா  ப்ளீஸ். 





33 comments:

  1. மோதலற்ற
    உலகைத் தாங்க விரும்பும்
    கைகளிலிருந்து
    மலர்ந்த
    ரோஜா
    பனிப்பொழிவின் மத்தியில்
    வாடாமல் கிடக்கிறது!
    சிவப்பில் வெண்மை படரட்டும்!
    அருமை அம்மா!
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! முதல் வருகைக்கும் இனிய கருத்திற்கும்.

      Delete
  2. பனியில் நனைந்தாலும்
    துளியும் நிறம் மாறேன்
    தனியே கிடந்தாலும்
    தளர்ந்து நான் போகேன்
    துணையை தேடி நான்
    தொலைந்தும் போகேன்
    (என்கிறது இந்த சிவப்பு ரோஜா)//
    அருமை சகோ...

    உலகம் உருண்டை தானே..? என்பக்கம் நேரம் இருப்பின் வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி ! வருகைக்கும் இனிய கருத்திற்கும்.

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி! சகோ வருகைக்கும் இனிய கருத்திற்கும்.

      Delete
  4. தொலைந்து போக, நீர் என்ன பனியா?.எங்கப்பா? மறக்க முடிமா?.அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! வருகைக்கும் இனிய கருத்திற்கும்.

      Delete
  5. ---//பெண்ணுக்குள் தோன்றும் புதிராய்
    மண்ணுக்குள் தோன்றும் மரமாய்
    விண்ணுக்குள் தோன்றும் வரமாய்.
    பண்ணு க்குள் தோன்றும் பரவசமாய்.///
    அருமை அருமை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வருகைக்கும் இனிய கருத்திற்கும்.

      Delete
  6. இனியாச்செல்லம் !!!! இப்படி இருக்கிறீர்கள்!!! பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது!!! உங்கள் கலகல பேச்சை போல அருமையாக இருக்கிறது படக்கவிதை!! சூப்பர்:)

    ReplyDelete
    Replies
    1. அம்மு sorrymma எப்படி இருக்கிறீர்கள் வந்திட்டேன்ல. நன்றி ம்மா கலகலப்பான வருகைக்கும் கருத்திற்கும். என்ன பதிவையே காணோமே என்னாச்சு ம்..ம். சட்டுப் புட்டுன்னு எழுதிப் போடுங்கள் ok வா

      Delete
  7. மோதிப் பார்ப்பதால் பாதிப்பு தான் அதிகம்
    வாதிக்காமல் வாழ்க்கையை வென்றிடலாமே
    ஸூப்பர் சகோ வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நலம் தானே ?

      Delete
    2. நன்றி சகோ நலமே உள்ளேன் திருமணநாள் நெருங்குவதால் ரொம்பவே busy அது தான் முடிந்தவுடன் வருவேன் வெகு சீக்கிரம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பேன் அனை த்து பதிவுகளையும் கருத்து தான் இடுவதில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள் சகோ மீண்டும் வரும்வரை.

      Delete
  8. மோதிப் பார்ப்பதால் பாதிப்புத் தான் அதிகம்
    ஆனால்
    நீ எனைத் தாங்க
    நானும் உனைத் தாங்குவேன்
    என்று அடுக்கிப் படிக்கிறேன்

    சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வருகைக்கும் இனிய கருத்திற்கும்.

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. படங்களும் பாக்களும் அருமைத்தோழி..
    //வாதிக்காமல் வாழ்க்கையை வென்றிடலாமே// மிக நன்று அன்புத் தோழி.

    பனியில் நிறம் மாறா ரோஜாவைப் போல, உங்கள் இடைவெளியில் நினைவில் வைத்திருப்போம், அம்ம! :)

    ReplyDelete
    Replies
    1. அட தேனு எப்படி இருக்கிறீர்கள் . மிக்க நன்றி ஏனா மறக்காமல் இருப்பதற்கு த் தான் ஹா ஹா ... இனித் தொடர்வோம் மிக்க நன்றி! வருகைக்கும் இனிய கருத்திற்கும்.

      Delete
  11. **** நாம் என்ன மனிதர்களா
    மாற்றிப் பேசி மனம் நோக வைக்க
    என்ன நான் சொல்றது***

    பிரமாதம், இனியா! மனிதர்கள் தங்களைத் தாமே ஏன் உயர்திணை என்று சொல்லிக்கிறார்கள்ணு தெரியலை. அஃறிணைக்கும் கீழேதான் மனிதர்கள்- விலங்குகளின் அகராதிகளில்!

    ஆமாம், தலைப்பு, "துணையைத் தேடி தொலைந்தும் போனேன்" என்று வராதா? அரைகுறைத் தமிழில் எழுதும நான் எல்லாம் "திருத்துநர்" ஆகிவிட்டேன் பாருங்க! நானும் மனிதந்தானே? அதான்.. :))))

    ReplyDelete
    Replies
    1. \\\\\பிரமாதம், இனியா! மனிதர்கள் தங்களைத் தாமே ஏன் உயர்திணை என்று சொல்லிக்கிறார்கள்ணு தெரியலை. அஃறிணைக்கும் கீழேதான் மனிதர்கள்- விலங்குகளின் அகராதிகளில்!////
      அட வருண் மெல்லமா சொல்லுங்கய்யா யாரரவது கேட்டுவிடப் போகிறார்கள் இல்ல..... என்ன மாட்டி விடப் போகிறீர்களா என்ன

      \\\\"துணையைத் தேடி தொலைந்தும் போனேன்" என்று வராதா?////// சா சா அதெல்லாம் வராது ஏனா யாரும் தொலையவில்லையே வருணும் வலையில் சிக்கி வந்து போய்க் கொண்டு தானே இருக்கிறார். தொலையவே இல்லையே அப்புறம் எப்படி எழுதுவது ஹா ஹா ....

      Delete
  12. அருமையான வரிகள் சகோதரி! உங்கள் வரிகளில் தொலைந்துவிட்டோம்!!!

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ அதெல்லாம் வேண்டாம் சகோ அப்புறம் என்னால் உங்களை தேடிப் பிடிக்க முடியாது அது தான் உங்களை காண்பது கடினமாக உள்ளதா? ஹா ஹா ..

      Delete
  13. அன்புள்ள சகோதரி,
    மோதிப் பார்ப்பதால் பாதிப்பு தான் அதிகம்
    வாதிக்காமல் வாழ்க்கையை வென்றிடலாமே
    பூரிக்கும் படியாய்...

    நாம் என்ன மனிதர்களா?
    மாற்றிப் பேசி மனம் நோக வைக்க
    என்ன நான் சொல்றது...

    என்ன நான் சொல்றது...
    எண்ணிப் பார்த்தால்...
    நொடிப் பொழுதில்...
    உயர்திணையை அஃறிணையாக ஆக்கி...
    அஃறிணையை உயர்திணையாக்கி
    உயர்திணையாகிப் போனீர்கள்!
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி !சகோ வருகைக்கும் கருத்திற்கும்.

      Delete
  14. பனியில் நனைந்தாலும்
    துளியும் நிறம் மாறேன்
    தனியே கிடந்தாலும்
    தளர்ந்து நான் போகேன்
    துணையை தேடி நான்
    தொலைந்தும் போகேன்

    ஒற்றை ரோஜாவுக்கே உயிருள்ள வார்த்தைகளா அருமை அருமை

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா வாருங்கள் கவிஞரே ஆமா நீங்கள் ரொம்ப தூரம் போய் விட்டீர்களே ம்...ம்..ம் மறுபடி எப்போ வருகிறீர்கள் அடிக்கடி கவிதை தாருங்கள். யாவரும் மகிழ மிக்க நன்றி வருகைக்கும் இனிய கருத்திற்கும்

      Delete
  15. மீண்டும் மீண்டும் மீண்டு வா... மறக்காமல் தேடுகிறோம் பார்த்தீர்களா..!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! வருகைக்கும் கருத்திற்கும்.

      Delete
  16. வணக்கம்
    அம்மா.

    ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்க நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன் !வருகைக்கும் கருத்திற்கும்.

      Delete
  17. மிக்க நன்றி! சகோ வருகைக்கும் இனிய கருத்திற்கும்.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.