Monday, January 27, 2014

விபரீத ஆசைகள்நோயினில் நோடிந்திருந்தேன் 
வீட்டினில் தனித்திருந்தேன்
வாதையில் படுத்திருந்தேன் 
விநோதமாய் உணர்ந்தேன்
வியந்தேன் நெஞ்சினில் 
வண்ணமாய் எண்ணங்கள் 
சொரியக் கண்டேன் 

மண்ணை பார்த்தேன் 
விண்ணை பார்த்தேன் 
விபரம் அறியாது தவித்தேன் 
பஞ்சபூதங்கள் தானருகில் 
பரிசீலனை செய்யவே பாடிய
படியே எழுதுகோல் எடுத்தேன் 
எண்ணங்கள் தாள்பதித்தேன்.
பதறாமல் பாங்குடன் 
கேள் என்றே 
படித்தேன்
மழையை கண்ணால் 
கட்டிட ஆசை
மின்னலைக் கூட 
தொட்டிட ஆசை என்றேன்

காற்றினைக் கண்ணால் 
கண்டிட ஆசை நெருப்பைக் 
கூட சுட்டு விரலால் 
தொட்டுப் பார்த்து சுட்டிட 
ஆசை ஒட்டு மொத்த 
நீரினைக் கூட உறிஞ்சிக் 
குடிக்க ஒரு பேராசை 

ஓயாத அலைகள் சூரிய சந்திரர்க்கு 
ஓய்வு கொடுத்திட வேண்டும் 
என்றாசை மனிதரை எல்லாம் 
மாணிக்கமாக மாற்றிட ஆசை 
நட்சத்திரங்கள் அனைத்தையும் 
மாலையாய் கோர்த்து மகளின் 
கழுத்தில் அணிந்திட ஆசை

வான வில்லை வளைத்து 
என் மகனின் கையில்  
கொடுத்திட ஆசை என் உயிரை 
பிரித்து கயிறாய்த் திரித்து 
கணவரை அதனால் கட்டிட ஆசை
உயர்ச்சி தாழ்ச்சி ஏழ்மை கூட 
ஒழிந்திடவேண்டும் என்றொரு ஆசை 

மாண்ட மண்ணின் மைந்தர்கள் 
மீண்டும் தோன்றிட வேண்டும் 
என்றொரு ஆசை தரணியில் தமிழ் 
இனம் காக்க ஒருவன் ஹரனாய் மாறி தரணி 
முழுவதும் வென்றிட ஆசை இதனிலும் 
மேலாய் ஆண்டவன் மடியில் ஒரு கணமேனும் 
ஆழ்ந்து உறங்கிட வேண்டும் என்பது என் தீராத ஆசை என்றேன்

ஒரு கணம் பஞ்சபூதங்கள் 
மருண்டே நின்றது 
மறந்திடு என்றது 
விளையாட்டு வினையாவது 
போல் விரைந்தே சென்றது 
பார்த்தவன் விண் நகைத்தான் 
பின் புன்னகைதான்

விண்மீனும் கனிவாய் 
கண் சிமிட்டியது இனிமையாய் 
இரவும் நிலவும் எனை ஈர்க்க 
கதிரவன் கதிர்களால் கையசைக்க 
வாயுவும் மெல்லென வாடையை 
வீசிட உணர்வினை இழந்தேன் 
உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

இது உண்மை தான் என் முதல் கவிதை எல்லோரும் எல்லாம் எழுதி விட்டிருப்பர்கள். நான் எதை எழுதுவது வித்தியாசமாக எழுத நினைத்தே  நடக்கமுடியா தவற்றை தொகுத்து எழுதிபார்த்தேன். அதுவே பின்னர் விருப்பமாக தொடர்கிறது.
20 comments:

 1. ரசிக்க வைக்கும் ஆசைகள்...

  நிறைவேறவும், தொடரவும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையில் மனம் நிறைந்தது.
   மிக்க நன்றி... வாழ்க வளமுடன்....!

   Delete
 2. கடல்போல் விரியும் அற்புதமான
  ஆசைகள்.மனம் கவர்ந்த அற்புதமான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வரவால் உள்ளம் குளிர்ந்தது.
   மிக்க நன்றி கவிஞரே..! தொடர வேண்டுகிறேன்.
   வாழ்க வளமுடன்....!

   Delete
 3. விரியட்டும் ஆசைகள்,

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் மது ..!
   தங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்.
   மிக்க நன்றி ..! வாழ்க வளமுடன்....!

   Delete
 4. வணக்கம்
  அம்மா.

  ஓ............ஓ...... எத்தனை ஆசைகள்.
  தரனியில் பிறந்திட்ட மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும்.... அந்த வகையில் தங்களின் மனதில் மலந்த ஆசைகள் எத்தனை... எல்லா ஆசைகளையும் ஒன்றாக சேர்த்து கவியாக அமைத்த விதம் சிறப்பு.... ஒவ்வொரு வரிகள்ளும் நன்று இன்னும் பல பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள் அம்மா


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன் !
   வாருங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சியை ஊட்டியது மிக்க நன்றி ரூபன்...!
   ஆசைகளும் கனவுகளும் மனிதர்களாகிய எமக்கு அவசியமே அவை நிறைவேற்றக் கூடிய ஆசைகளாய் வளர்த்துக் கொள்வது தான் நன்று! அதுவே முனேற்றப் பாதையை வகுக்க வழி சமைக்கும். இவை தமாசுக்காக எழுதியவை அதுவும் இல்லாமல் கவிதைக்கு பொய் அழகு தானே.
   நன்றி, வாழ்க வளமுடன் ...!

   Delete
 5. தங்கள் கவிதையின் கருத்து மிகச் சிறப்பு. அதிலும் புகழ்பெற்ற வைரமுத்துவின் சின்னச்சின்ன ஆசைகளைவிடவும் அழகான ஆசைகள்-மழையை கண்ணால்
  கட்டிட ஆசை
  மின்னலைக் கூட
  தொட்டிட ஆசை என்றேன்

  காற்றினைக் கண்ணால்
  கண்டிட ஆசை நெருப்பைக்
  கூட சுட்டு விரலால்
  தொட்டுப் பார்த்து சுட்டிட
  ஆசை ஒட்டு மொத்த
  நீரினைக் கூட உறிஞ்சிக்
  குடிக்க ஒரு பேராசை - என்பது மிகவும் அருமை. ஆனால் சகோதரி, இவ்வளவு அழகான கற்பனையும் சொற்புனைவும் கொண்ட நீங்கள் ஏன் கவிதை வடிவத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தக் கூடாது? முயன்றால் சொற்செட்டுடனும் அழகிய வடிவிலும் உங்களால் தரமுடியும். முயன்று சிறந்த கவிதைகளைத் தரச் சகோதர வாழ்த்துகள். தங்கள் தளத்தை அறிமுகப்படுத்திய தம்பி மது (எ) கஸ்தூரிக்கு என் நன்றி. வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரா ! வாருங்கள் !
   தங்கள் முதல் வருகையில் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன். மனம் சோர்ந்து இனி எழுத வேண்டாமே என்றிருக்க தங்கள் கருத்துக்கள் அசரீரி போலவும் ஆணையிடுவது போலவும் உணர்ந்து கண்கள் நீர் சொரிந்தன. தங்களின் நம்பிக்கை, ஊக்கம் தரும் கருத்துகளின் உந்துதலில் இயன்றவரை முயற்சி செய்வேன்.
   மிக்க நன்றி ! தொடர வேண்டுகிறேன் ! நானும் தொடர்கிறேன்.
   வாழ்க வளமுடன்....!

   அறிமுகம் செய்த சகோதரர் மதுவுக்கும் தோழி கஸ்தூரிக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்....!

   Delete
 6. "//இதனிலும் மேலாய் ஆண்டவன் மடியில் ஒரு கணமேனும்
  ஆழ்ந்து உறங்கிட வேண்டும் என்பது என் தீராத ஆசை என்றேன்//" -

  எவ்வளவு பெரிய ஆசையை இப்படி இரண்டே வரிகளில் சொல்லிவிட்டீர்கள். மனிதனாக பிறந்த எல்லோருக்கும் அந்த ஆசை கண்டிப்பாக இருக்கும்.

  வாழ்த்துக்கள். உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேற.

  ReplyDelete
  Replies
  1. சகோதரா ! தங்களுடைய வருகையும் கருத்தும் என்னை எழுது எழுது என்று உற்சாகப் படுத்துகிறது. நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை சகோதரா மிக்க நன்றி ..! வாழ்க வளமுடன்....!

   Delete
 7. நியாயமான ஆசைகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி !வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!

   Delete
 8. அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி !வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!

   Delete
 9. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி !வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!

   Delete
 10. தோழி, என்ன சொல்லுவேன்..அப்படி ஒரு அருமையான கவிதை..ஆசைகள் ஒவ்வொன்றும் நிறேவேருமோ இல்லையோ புரிந்துகொள்ள முடிகிறது..
  //காற்றினைக் கண்ணால் கண்டிட ஆசை// மிக அருமை தோழி. மேலும் மேலும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் இனிய கருத்து கண்டு மிகவும் மகிழ்ந்தேன். மேலும் எழுதும் படி தூண்டுகிறது. மிக்க நன்றிம்மா வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் தோழி ....!

   Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.