Saturday, December 7, 2013

ஷிர்டி சாயி ஸ்ரீ சாயி

இமைக்காமல் எமை பார்த்திரும் என்றும் கண்ணுக்குள்ளே வைத்து காத்திரும்

இமைக்காமல் எமை பார்த்திரும் என்றும் கண்ணுக்குள்ளே வைத்து காத்திரும்

 

ஷிர்டி சாயி ஸ்ரீ சாயி 
அன்பு சாயி அருள் சாயி
சாயி என்பது மந்திரமே 
செய்திடும் பல வித அற்புதமே

சாயி என்று உச்சரித்ததுமே
சங்கடம் தீரும் அக்கணமே
சீரடி தொழுதவர் பிணி விலகும்
நம் அடி சேராதிடர் ஒழியும்

பாதங்கள் பற்றிட 
பேரின்பம் கிட்டிடும்
சேவித்த கரங்களுக்கோ
ஜீவிக்க அருள் வழங்கும்

சாயி புகழ் பாட
தன் புகழ் ஓங்கிடும்
கடைக் கண் பார்வையில் 
கரைந்திடும் பாவம்

ஏற்றிடும் விளக்கில் பால் 
ஊற்றிடும் வயிற்றில்
சுடரும் ஒளியே 
படரும் வாழ்வில்

தூவிடும் பூவில் 
துலங்கிடும் வாழ்வு
கூடா நட்பும் உடனே விலகும்
தேடா தின்பம் வந்தே அடையும்  

உணவு படைத்திட 
கெடுத்திடும் ஏழ்மை 
அனுதினம் தொழுதிட 
விளங்கிடும் புலமை
 
 அவர் அன்பினை வேண்டிட 
ஒண்டிடுவார் உடன்
 விடை தர வேண்டினால் 
நடை பயில்வார் உடன் 

சாயி செப்பிய வார்த்தைகள் ரத்தினமே
சிந்திய பார்வையும் சந்தனமே 
 தீன தயாளா திடம் தருவாயே
 கருணை கடலே எமை ரட்சியுமே









  

31 comments:

  1. என்னே வரிகள் சிறப்பு...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      முதல் வருகை எனை முன்னாடி செல்ல இடும் கருத்து எப்போதும் போல் என்னை மகிழ்விக்கும். இன்றும் மகிழ்ந்தேன். மிக்க நன்றி சகோதரா வாழ்க வளமுடன்....!

      Delete
  2. https://www.youtube.com/watch?v=73ARKEtcyrQ
    listen here.
    subbu thatha

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சுப்பு தாத்தா
      எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை தாத்தா. மிக்க நன்றி தாத்தா (என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே). வார்த்தைகளே வரவில்லை.உங்கள் குரலில் தான் என் கவிதை பொருள் செறிந்தது தாத்தா, மெருகூட்டியது.
      மேலும் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்...!.

      Delete
  3. சாயி என்று உச்சரித்ததுமே
    சங்கடம் தீரும் அக்கணமே!...

    ஸ்ரீ சாய் நாதா சரணம்!.. சரணம்!..
    சஞ்சலம் தீர்க்க வருவாய் சரணம்..
    ஸ்ரீ சாய் நாதா சரணம்!.. சரணம்!..
    சத்தியம் ஜயிக்க அருள்வாய் சரணம்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரா...!
      நிச்சயம் சாயி என்றதும் அருள்வார் யாவர்க்கும்.
      வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி....!
      வாழ்க வளமுடன்...!

      Delete
  4. உருகிப் பாடினீர் உவந்து ஏற்றியே!

    அருமையான பக்திப் பாமாலை!

    அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும் தோழி!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி
      உங்கள் வருகையால்
      உவகை கொண்டேன்
      இட்ட கருத்தினால்
      கனிவு கொண்டேன்
      இறுகப் பற்றினேன்
      உம் இனிய நட்பை

      சாயி அருளால்
      இளமதி பெருமதி பெற்று
      தினம் தினம் கவிதை பொழி

      மிக்க நன்றி தோழி...!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  5. வணக்கம்
    உள்ளமது கசிந்து -உருகிய வரிகளை
    உயிராக வரிவடிம் -ஊட்டி
    அழகு தமிழில்-ஆயிரம் வார்த்தைகள்-சொல்லும்
    அழகிய கவிதை-வாசக நெஞ்சங்களின் உள்ளங்களை
    அள்ளியது... மேலும்.. பல படைப்புக்களுடன்
    வசந்த கால காற்றாக வீசட்டும்...வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன் ...! அன்பான வருகையினால் அகம் மிக மகிழ்ந்தேன். ஊக்கம் தரும் கருத்துகள் என்னை பலப் படுத்துகின்றன படைப்புகள் தர வழி வகுக்கின்றன. மிக்க நன்றி

      சாயி அருளால் கனவிலும் நினைவிலும் கண்டது பலிக்க வாழ்த்துகிறேன்....!

      Delete
  6. இனிய வணக்கம் சகோதரி...
    அன்பிற்கினிய சகோதரி இளமதி அவர்களின்
    வலைத்தளத்தில் உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன்.
    கவிச்சோலையாக காட்சியளிக்கிறது உங்கள் தளம்.
    தொடர்ந்து வருகிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே....! வணக்கங்கள் பல...!
      முதல் வருகையில் என் மனம் நெகிழ்ந்தது. என் இனிய தோழி இளமதிக்கு பல கோடி நன்றிகள்....! நீங்கள் இட்ட கருத்தை கண்டு என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ரொம்ப நன்றி ...! தொடர வேண்டுகிறேன்.
      வாழ்க வளமுடன்.

      Delete

  7. வணக்கம்!

    குருவடி போற்றிக் கொடுத்த கவிதை
    அருங்கொடி கொண்ட அழகு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே தங்கள் வருகை கண்டு அகம் மலர்ந்தேன் மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்.
      வாழ்க வளமுடன் ....!

      Delete
  8. வணக்கம் கவிஞரே ...!

    சாயி அருட் பார்வை பட்டு
    தெறிக்கட்டும் உம் புகழ் திக்கெட்டும்
    புகழட்டும் பூவுலகு என்றும் உமை
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    வாழ்க வளமுடன்...!

    ReplyDelete
  9. அருள் குருநாதன் திருவடி மலரில்
    பொருந்திடும் கருணை கரைத்திடும் கவலையை!!!.
    வருந்துன்பம் நீக்கிடும் வளமெல்லாம் சேர்த்திடும்
    குருநாமம் துணை நிற்கும் எந்நாளுமே!!!

    அருமையானதொரு கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி.பல முறை வாசித்து மகிழ்ந்தேன். திரு.சுப்புத் தாத்தாவின் பகிர்வுக்கும் மிக்க நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி....!
      உங்கள் முதல் வருகை என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தன. கருத்தினை கண்டு பூரிந்துப் போனேன். சுப்பு தாத்தாவின் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்...!
      தொடர வேண்டுகிறேன்
      வாழ்க வளமுடன்....!

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. //இமைக்காமல் எமை பார்த்திரும் என்றும் கண்ணுக்குள்ளே வைத்து காத்திரும்.//- என் வேண்டுதலும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி உங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ...!
      வாழ்க வளமுடன்.....!

      Delete
  12. சகோதரிக்கு அன்பு வணக்கம்
    சாயி பாபா பற்றிய கவிதை மிகச் சிறப்பாக வந்துள்ளது சகோதரி. குருவின் திருவடி வணங்கி உலகம் யாவும் இன்பம் பெற்றிட அருள் பாலிக்க வேண்டிக் கொள்வோம். வரிகள் அனைத்திலும் பக்தி சுவை சொட்ட சொட்ட தந்த விதம் மிக அழகு அற்புதம் சகோதரி. இது போன்று கவிதை நிறைய தாருங்கள் ரசித்து படிக்க காத்திருக்கிறோம். பகிர்வுக்கு நன்றி. தாமதமான வருகைக்கு பொருத்தருள்க. வலைப்பக்கத்தில் இணைந்து விட்டேன். இனி தாமதம் ஆகாது. நன்றி சகோதரி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா
      உங்கள் வருகை கண்டு அக மகிழ்ந்தேன் கருத்தினை கண்டு எனை மறந்தேன்.என்றும் உங்கள் ஆதரவு இருந்தால் நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன். என்னையே எனக்கு காட்டி கொடுப்பது நீங்கள் தானே. நீங்கள் அனைவரும் எனக்கு கண்ணாடி மாதிரி தான் காட்சி தருகிறீர்கள். முகத்தை கண்ணாடியில் பார்த்து தானே சரி பிழையை தெரிந்து கொள்கிறோம் அது போல
      வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்...! வலைபக்கத்தில் இணைந்ததுக்கும் நன்றியே...!

      வாழ்க வளமுடன்....!

      Delete
  13. சத்திய வார்த்தைகள் ஆயிரமாய்
    முத்தியை பெறும்வழி இதுவென்று
    நித்தியம் சொன்ன சாயிபாவா
    நினைவுகள் கூட அற்புதமே..!

    அருமை இனியா
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா
      நீண்ட நாட்களின் பின் வருகை மகிழ்வளிக்கிறது.

      சீராளன் சீரோடு இடும்
      கருத்து பேராள உதவும் எனக்கு.
      பாபாவின் பேரருள் கிட்ட
      பெரும்பேறு கிட்டும் உமக்கு.
      அவரை துதிப்போர்க்கு என்றும்
      இல்லை ஒரு துன்பம்
      அவர் அடி தொழு விடை பகர
      சாயி சரணம்.

      உங்கள் வருகையும் கருத்தும் கண்டு பூரித்து போனேன்.
      மிக்க நன்றி சகோதரா. என் வலைத்தளம் காய்ந்தன உங்கள் கருத்தின்றி.
      வாழ்க வளமுடன்......!

      Delete
  14. சேவித்த கரங்களுக்கோ
    ஜீவிக்க அருள் வழங்கும்//உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா
      உங்கள் வருகையும் தருத்தும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகின்றன அன்புக்கு நன்றி.
      தொடர வேண்டுகிறேன்.

      வாழ்க வளமுடன்...!

      Delete
  15. படித்தும் ரசித்தேன்
    கேட்டும் மகிழ்ந்தேன்
    மிக்க சந்தோசம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரமணி
      உங்கள் வரவும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சியும் ஊக்கமும் கொண்டேன். உங்கள் கருத்துக்களே இதுவரை வளர்த்துள்ளது. இன்னும் வளர உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
      மிக்கநன்றி...! வாழ்க வளமுடன்.....!

      Delete
  16. தீன தயாளா திடம் தருவாயே
    கருணை கடலே எமை ரட்சியுமே //
    மகிழ்வோடு வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே...!
      உங்கள் வருகையும் கருத்தும் கண்டு உள்ளம் குதூகலிக்கிறது.
      மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன்.....!

      Delete
  17. The flow of language is gentle and very rich in meaning.I am running on the banks of a mighty river.I enyoy,appreciate and wonder the flow, but not able to get into the river.May be the Bloggers meet will bring some one to teach me swimming.Then ofcourse you can see and feel the champion.good expression.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.