Saturday, December 21, 2013

ஆலகால முண்ட கண்டனே

 சுட்டியை படத்தின் மேல் கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்

ஆலகால முண்ட 
கண்டனே
இவ்வண்டம் 
முழுதும் உந்தமே

தில்லையிலே 
ஆடும் கூத்தனே
திருவோடு 
ஏந்தும் பித்தனே 

எமை திண்டாட 
வைப்பவனே எம்
திமிரினை அடக்கும்
தில்லை நாதனே

இடு காட்டில் 
வாழும் அப்பனே
எம் இடர் தீர 
வாரும்  ஐயனே

விடை ஏறும் 
வல்லவனே
கடை ஏற 
வைப்பவனே

கண்ணப்பன் 
கண்ணவனே எம்
எண்ணங்கள் அறிவாயே
ஈடேற்றி விடுவாயே

அண்டங்கள் 
ஆடாது அசையாது
நீ கண் மலர் 
மூடிடக் கூடாது

நம் அன்பினை 
கடந்தால் ஆகாது
பாவம் கடுந் தவம் 
செய்தாலும் தீராது

பொன்னார் 
மேனியனே 
உன் புகழ் பாட 
உருகுவையே 

உமையாளருகிருந்தா 
மருகுவையே
கங்கை நீரையே
பருகுவையே

நெற்றியிலும்
கண்ணை வச்ச
நித்திரைய 
தள்ளி வச்ச

மனசில 
மங்கை வச்ச
சிரசில 
கங்கை வச்ச 

எங்களையோ 
ஏங்க வச்ச
பாவங்களை 
செய்ய வச்ச

பாம்பையும் 
கழுத்திலிட்டு 
புலித் தோலையும் 
இடுப்பிலிட்டு 

எமை விலகிட 
செய்தாயோ
நீ வெறுத்திட 
நினைத்தாயோ

நாமுனை அணுகாது
வேதனை விலகாது
நீ எமை சேராது
நிதர்சனம் கிடைக்காது 

ஆதியும் அந்தமும் 
இல்லாதவன் 
பந்த பாசம் எம் மீது
கொள்ளாதவன்

அண்ணா 
மலையானே
அன்பினில் 
விளைந்தவனே

எண்ணிய போது 
நீ வரவேண்டும்
இன்பங்கள் யாவும்
தரவேண்டும்










27 comments:

  1. வணக்கம்
    அம்மா

    எண்ணிய போது
    நீ வரவேண்டும்
    இன்பங்கள் யாவும்
    தரவேண்டும்

    உயிர்இனங்களை படைத்தவன் பற்றிய கவிதை மிகச் சிறப்பாக உள்ளது கவிதையின் வரிகள்...மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா

    சிறப்பாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன்
      அன்பான வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்.
      மிக்க நன்றி.....! வாழ்க வளமுடன்....!

      ஜோதியானவன் இல்லாளில்
      பாதியானவன் எல்லா ஜீவராசிகளிலும்
      இரண்டறக் கலந்தே வாழ்பவன் சிவன்
      அவனை வணங்கிட வீழும் துயர் சூழும் புகழ் நாளும் மகிழ்

      Delete
  3. ''..நாமுனை அணுகாது
    வேதனை விலகாது
    நீ எமை சேராது
    நிதர்சனம் கிடைக்காது..''
    நல்ல வரிகள்
    நல்ல சொற் கட்டு ரசித்தேன் .
    இனிமை. நல் வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி
      உங்கள் முதல் வருகையில் முக்குளித்தேன் மகிழ்ச்சியில்.
      உம் அன்பினில் கட்டுண்டேன்
      இனிமையாய் கருத்திட்டு
      வளமாய் கவி புனைய
      வாழ்த்தும் இட்டாய் நிறைவாய்

      நிறைவாய் வாழ நெற்றிகண்ணன்
      நிச்சயம் அருள் புரிவான்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி......!
      தொடர வேண்டுகிறேன்.

      Delete
  4. இனிய உன் இதயத்தில்
    இதமாக அமர்ந்துகொண்டேன்
    தேன் கனிபோன்ற பா சுவைத்து
    தென்பாக நடந்து சென்றேன் ....

    கனிவான வார்த்தைக்குக்
    கை கூப்பி வணைகின்றேன்
    எமையாளும் ஈசனவன்
    என்றென்றும் துணையிருப்பான் ..

    வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. வருக வருக அம்பாளே உன் வருகை நல்வரவாகுக....!

      துள்ளும் இதயம்

      கொள்ளும் இன்பம்

      பொங்கும் வருகையில்



      அன்புடன் இன்பா சுவைத்து
      இதயத்தில் அமர்ந்திட்ட இனிய
      அம்பாள் அடி தொடர்வேன் இனி
      இனியவளே கனியாய் கனிந்து

      இதயத்தில் இணைந்திட்ட

      இன்மகளே பொன்மகளே என்றும்

      பாவேந்தி பூத்துக் குலுங்கு

      புகழாரம் சூட்டி போற்றும் உலகு

      வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி தோழி...! தொடர வேண்டுகிறேன்......!

      Delete
  5. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    அற்புதமான வரிகள். எப்பொழுதும் பக்தி சம்பந்தமான வரிகளைப் படிக்கும் போது அந்த பக்தி உணர்விலேயே லயித்து படித்து விட்டு கடந்து விடுவேன். முதல் முறையாக ரசித்து படித்தேன் சகோதரி. ரசித்த வரிகள் நிறைய இருப்பினும் இரு வரிகளைச் சுட்டிக்காட்டுகிறேன்
    //மனசில
    மங்கை வச்ச
    சிரசில
    கங்கை வச்ச // சிவனை வணங்கவும் புகழ் பாடவும் அழகான வாய்ப்பைத் தங்கள் கவிவரிகள் தந்தமைக்கு மிக்க நன்றிகள். தொடர்ந்து இது போன்ற பக்தி கவிகளையும் அழகியல் கலைகளையும் ரசிக்க தாருங்கள் ( மீன் குஞ்சுக்கு நீந்த சொல்லித்தரணுமா!). பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரனுக்கு

      மிக்க நன்றி வருகையும் கருத்தும் எப்பொழுதும் போல் ஊக்கம் தரும் உங்கள் வார்த்தையும் ஒன்றென்ன ஓராயிரம் எழுத முடியும் எனும் நம்பிக்கை தருகிறது. உங்கள் விருப்பம் போல் மேலும் எழுத முயற்சி செய்கிறேன். உங்கள் ஆதரவினால் இது வரை வந்திருக்கிறேன். தொடர்ந்தும் தர வேண்டுகிறேன்.

      வாழ்க வளமுடன்....!
      கணணியில் ஏற்பட்ட கோளாறினால் கருத்திட சிரமமாக இருக்கிறது பல தடவை முயற்சி செய்து இட்டிருக்கிறேன்.

      Delete
  6. அழகிய சிவனழகை அனுபவித்துப் பாடினீர்!
    அருளுவான் அனைவருக்கும் அற்புதமானவன்!

    மிக அருமையான கவிதை!
    பக்திரசம் சொட்டச் சொட்டத் தந்தீர்கள்!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. ஈசனின் எழிலை இனிதாய்
      பாடியதாய் இயம்பியது
      இனித்தது இன்மகளே
      போற்றும் உன் உள்ளம்
      பொங்கிடும் எந்நாளும்
      பொலிவுகள் கூடி....!

      .எங்கே காணவில்லை என்று பார்த்தேன் தோழி. விடுதலை நாட்களில் வேலைகள் அதிகமாக இருக்கும் என நினைத்தேன். வந்து விட்டீர்கள்.

      மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன்...

      Delete
  7. பக்தி மணம் கமழும் பாடல் அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....!
      தொடர வேண்டுகிறேன்.
      வாழ்க வளமுடன்.....!

      Delete
  8. அண்டங்கள்
    ஆடாது அசையாது
    நீ கண் மலர்
    மூடிடக் கூடாது

    இமைப்போதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..!!
    இமவான் மகளை இடப்பாகம் கொண்டானின் புகழை
    இனிய கவிதை வடிவில் அளித்தமைக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி
      உங்கள் வருகையில் மனம் மகிழ்ந்தேன்.
      இனிய கருத்தில் இதம் கொண்டேன்.

      சித்தம் எல்லாம் சிவமயம்
      இனி இல்லை எமக்கொரு பயம்.

      வாழ்க வளமுடன்....!

      Delete
  9. பாடல் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்துக்கும்

      வாழ்க வளமுடன்....!

      Delete
  10. தினமும் சிவன் பாடல்களை படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
    சிவனை போற்றி எழுதிய வரிகள் அத்தனையும் சிறப்பு! ஆன்மிக சிந்தனைகளை இனிய கவிதை வடிவில் எழுதுவது பாராட்டுக்குரியது...!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அவன் சித்தம் என்றால்
      புத்தம் புது கவிதை நித்தமும் பிறக்கும்

      நெற்றிக்கண்ணன் நிறைவாய் என்றும் வாழவைப்பான் உமை.
      வாழ்த்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி...!
      தொடர வேண்டுகிறேன்....!

      Delete
  11. மிக மிக அற்புதமான கவிதை
    நிச்சயம் வருவார்
    வாரி வாரித் தருவார்
    ஏனெனில் கவிதை அப்படி
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே

      வாரித் தரும் கருத்து
      என்னை வளர்த்து விடும்.
      வழங்கும் வள்ளல் உமை
      நல் வாழ்வு தேடி வரும்


      நெற்றிக் கண்ணன் நினைவு
      கொள்ள நெஞ்சினிக்க வாழ்வமையும்.
      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.....!
      வாழ்க வளமுடன்......!

      Delete
  12. இனியா உனது இறைகவி எல்லாம்
    தனியாய் இனிக்கும் தளிர்த்து !

    அழகிய கவிதை இறையருள் நல்கட்டும் என்றும் உனக்கு
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. சீராளா உன் சீரிய கருத்தென்
      சிந்தை குளிரவைக்கும்
      பாரிய மாற்றங்கள்
      பாதையில் உருவாக்கும்

      நடராஜன் என்றே நவின்றிட
      நல் வாழ்வு கிட்டிடும் நாளும்
      கூடிடும் இன்பம் எல்லாம்
      பாடிப் பரவும் அன்பொடு.

      வரவுக்கும் வாழ்த்துக்கும்.
      மிக்க நன்றி ......! வாழ்க வளமுடன்....!

      Delete

  13. வணக்கம்!

    ஆலகாலம் உண்டவனை! ஆடிக் களித்தவனைக்
    கோலத் தமிழில் குளித்தவனை! - ஞாலமெலாம்
    கொண்டு தரித்தவனைக் கூறிய பாட்டுக்குள்
    கண்டு களித்தோம் கனிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா....!
      தங்கள் வருகை நான் செய்த பாக்கியம்.
      தங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

      நீர் இட்ட வழி நடந்து செல்ல
      இனிக்கும் ஐயா கவிதை
      நீர் தொட்டதெல்லாம் துலங்கிடவே
      துணை செய்வான் ஈசன்.

      மிக்க நன்றி ...! வாழ்க வளமுடன்....!

      Delete
  14. Happy chritmas and a bright new year
    Vetha.Elanagthilakam

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.