இமைக்காமல் எமை பார்த்திரும் என்றும் கண்ணுக்குள்ளே வைத்து காத்திரும்ஷிர்டி சாயி ஸ்ரீ சாயிஅன்பு சாயி அருள் சாயி சாயி என்பது மந்திரமே செய்திடும் பல வித அற்புதமே சாயி என்று உச்சரித்ததுமே சங்கடம் தீரும் அக்கணமே சீரடி தொழுதவர் பிணி விலகும் நம் அடி சேராதிடர் ஒழியும் பாதங்கள் பற்றிட பேரின்பம் கிட்டிடும் சேவித்த கரங்களுக்கோ ஜீவிக்க அருள் வழங்கும் சாயி புகழ் பாட தன் புகழ் ஓங்கிடும் கடைக் கண் பார்வையில் கரைந்திடும் பாவம் ஏற்றிடும் விளக்கில் பால் ஊற்றிடும் வயிற்றில் சுடரும் ஒளியே படரும் வாழ்வில் தூவிடும் பூவில் துலங்கிடும் வாழ்வு கூடா நட்பும் உடனே விலகும் தேடா தின்பம் வந்தே அடையும் உணவு படைத்திட கெடுத்திடும் ஏழ்மை அனுதினம் தொழுதிட விளங்கிடும் புலமை அவர் அன்பினை வேண்டிட ஒண்டிடுவார் உடன் விடை தர வேண்டினால் நடை பயில்வார் உடன் சாயி செப்பிய வார்த்தைகள் ரத்தினமே சிந்திய பார்வையும் சந்தனமே தீன தயாளா திடம் தருவாயே கருணை கடலே எமை ரட்சியுமே |
என்னே வரிகள் சிறப்பு...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வணக்கம்
Deleteமுதல் வருகை எனை முன்னாடி செல்ல இடும் கருத்து எப்போதும் போல் என்னை மகிழ்விக்கும். இன்றும் மகிழ்ந்தேன். மிக்க நன்றி சகோதரா வாழ்க வளமுடன்....!
https://www.youtube.com/watch?v=73ARKEtcyrQ
ReplyDeletelisten here.
subbu thatha
வணக்கம் சுப்பு தாத்தா
Deleteஎப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை தாத்தா. மிக்க நன்றி தாத்தா (என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே). வார்த்தைகளே வரவில்லை.உங்கள் குரலில் தான் என் கவிதை பொருள் செறிந்தது தாத்தா, மெருகூட்டியது.
மேலும் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்...!.
சாயி என்று உச்சரித்ததுமே
ReplyDeleteசங்கடம் தீரும் அக்கணமே!...
ஸ்ரீ சாய் நாதா சரணம்!.. சரணம்!..
சஞ்சலம் தீர்க்க வருவாய் சரணம்..
ஸ்ரீ சாய் நாதா சரணம்!.. சரணம்!..
சத்தியம் ஜயிக்க அருள்வாய் சரணம்!..
வணக்கம் சகோதரா...!
Deleteநிச்சயம் சாயி என்றதும் அருள்வார் யாவர்க்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி....!
வாழ்க வளமுடன்...!
உருகிப் பாடினீர் உவந்து ஏற்றியே!
ReplyDeleteஅருமையான பக்திப் பாமாலை!
அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும் தோழி!
வாழ்த்துக்கள்!
வாருங்கள் தோழி
Deleteஉங்கள் வருகையால்
உவகை கொண்டேன்
இட்ட கருத்தினால்
கனிவு கொண்டேன்
இறுகப் பற்றினேன்
உம் இனிய நட்பை
சாயி அருளால்
இளமதி பெருமதி பெற்று
தினம் தினம் கவிதை பொழி
மிக்க நன்றி தோழி...!
வாழ்க வளமுடன்....!
வணக்கம்
ReplyDeleteஉள்ளமது கசிந்து -உருகிய வரிகளை
உயிராக வரிவடிம் -ஊட்டி
அழகு தமிழில்-ஆயிரம் வார்த்தைகள்-சொல்லும்
அழகிய கவிதை-வாசக நெஞ்சங்களின் உள்ளங்களை
அள்ளியது... மேலும்.. பல படைப்புக்களுடன்
வசந்த கால காற்றாக வீசட்டும்...வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன் ...! அன்பான வருகையினால் அகம் மிக மகிழ்ந்தேன். ஊக்கம் தரும் கருத்துகள் என்னை பலப் படுத்துகின்றன படைப்புகள் தர வழி வகுக்கின்றன. மிக்க நன்றி
Deleteசாயி அருளால் கனவிலும் நினைவிலும் கண்டது பலிக்க வாழ்த்துகிறேன்....!
இனிய வணக்கம் சகோதரி...
ReplyDeleteஅன்பிற்கினிய சகோதரி இளமதி அவர்களின்
வலைத்தளத்தில் உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன்.
கவிச்சோலையாக காட்சியளிக்கிறது உங்கள் தளம்.
தொடர்ந்து வருகிறேன்.
வாழ்த்துக்கள்.
வாருங்கள் சகோதரரே....! வணக்கங்கள் பல...!
Deleteமுதல் வருகையில் என் மனம் நெகிழ்ந்தது. என் இனிய தோழி இளமதிக்கு பல கோடி நன்றிகள்....! நீங்கள் இட்ட கருத்தை கண்டு என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ரொம்ப நன்றி ...! தொடர வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்.
ReplyDeleteவணக்கம்!
குருவடி போற்றிக் கொடுத்த கவிதை
அருங்கொடி கொண்ட அழகு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வாருங்கள் கவிஞரே தங்கள் வருகை கண்டு அகம் மலர்ந்தேன் மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்.
Deleteவாழ்க வளமுடன் ....!
வணக்கம் கவிஞரே ...!
ReplyDeleteசாயி அருட் பார்வை பட்டு
தெறிக்கட்டும் உம் புகழ் திக்கெட்டும்
புகழட்டும் பூவுலகு என்றும் உமை
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...!
வாழ்க வளமுடன்...!
அருள் குருநாதன் திருவடி மலரில்
ReplyDeleteபொருந்திடும் கருணை கரைத்திடும் கவலையை!!!.
வருந்துன்பம் நீக்கிடும் வளமெல்லாம் சேர்த்திடும்
குருநாமம் துணை நிற்கும் எந்நாளுமே!!!
அருமையானதொரு கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி.பல முறை வாசித்து மகிழ்ந்தேன். திரு.சுப்புத் தாத்தாவின் பகிர்வுக்கும் மிக்க நன்றி!!
வாருங்கள் சகோதரி....!
Deleteஉங்கள் முதல் வருகை என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தன. கருத்தினை கண்டு பூரிந்துப் போனேன். சுப்பு தாத்தாவின் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்...!
தொடர வேண்டுகிறேன்
வாழ்க வளமுடன்....!
This comment has been removed by the author.
ReplyDelete//இமைக்காமல் எமை பார்த்திரும் என்றும் கண்ணுக்குள்ளே வைத்து காத்திரும்.//- என் வேண்டுதலும்!
ReplyDeleteவணக்கம் தோழி உங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ...!
Deleteவாழ்க வளமுடன்.....!
சகோதரிக்கு அன்பு வணக்கம்
ReplyDeleteசாயி பாபா பற்றிய கவிதை மிகச் சிறப்பாக வந்துள்ளது சகோதரி. குருவின் திருவடி வணங்கி உலகம் யாவும் இன்பம் பெற்றிட அருள் பாலிக்க வேண்டிக் கொள்வோம். வரிகள் அனைத்திலும் பக்தி சுவை சொட்ட சொட்ட தந்த விதம் மிக அழகு அற்புதம் சகோதரி. இது போன்று கவிதை நிறைய தாருங்கள் ரசித்து படிக்க காத்திருக்கிறோம். பகிர்வுக்கு நன்றி. தாமதமான வருகைக்கு பொருத்தருள்க. வலைப்பக்கத்தில் இணைந்து விட்டேன். இனி தாமதம் ஆகாது. நன்றி சகோதரி. வாழ்த்துக்கள்!
வாருங்கள் சகோதரா
Deleteஉங்கள் வருகை கண்டு அக மகிழ்ந்தேன் கருத்தினை கண்டு எனை மறந்தேன்.என்றும் உங்கள் ஆதரவு இருந்தால் நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன். என்னையே எனக்கு காட்டி கொடுப்பது நீங்கள் தானே. நீங்கள் அனைவரும் எனக்கு கண்ணாடி மாதிரி தான் காட்சி தருகிறீர்கள். முகத்தை கண்ணாடியில் பார்த்து தானே சரி பிழையை தெரிந்து கொள்கிறோம் அது போல
வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்...! வலைபக்கத்தில் இணைந்ததுக்கும் நன்றியே...!
வாழ்க வளமுடன்....!
சத்திய வார்த்தைகள் ஆயிரமாய்
ReplyDeleteமுத்தியை பெறும்வழி இதுவென்று
நித்தியம் சொன்ன சாயிபாவா
நினைவுகள் கூட அற்புதமே..!
அருமை இனியா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
வாருங்கள் சகோதரா
Deleteநீண்ட நாட்களின் பின் வருகை மகிழ்வளிக்கிறது.
சீராளன் சீரோடு இடும்
கருத்து பேராள உதவும் எனக்கு.
பாபாவின் பேரருள் கிட்ட
பெரும்பேறு கிட்டும் உமக்கு.
அவரை துதிப்போர்க்கு என்றும்
இல்லை ஒரு துன்பம்
அவர் அடி தொழு விடை பகர
சாயி சரணம்.
உங்கள் வருகையும் கருத்தும் கண்டு பூரித்து போனேன்.
மிக்க நன்றி சகோதரா. என் வலைத்தளம் காய்ந்தன உங்கள் கருத்தின்றி.
வாழ்க வளமுடன்......!
சேவித்த கரங்களுக்கோ
ReplyDeleteஜீவிக்க அருள் வழங்கும்//உண்மைதான்
வாருங்கள் சகோதரா
Deleteஉங்கள் வருகையும் தருத்தும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகின்றன அன்புக்கு நன்றி.
தொடர வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்...!
படித்தும் ரசித்தேன்
ReplyDeleteகேட்டும் மகிழ்ந்தேன்
மிக்க சந்தோசம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வாருங்கள் ரமணி
Deleteஉங்கள் வரவும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சியும் ஊக்கமும் கொண்டேன். உங்கள் கருத்துக்களே இதுவரை வளர்த்துள்ளது. இன்னும் வளர உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
மிக்கநன்றி...! வாழ்க வளமுடன்.....!
தீன தயாளா திடம் தருவாயே
ReplyDeleteகருணை கடலே எமை ரட்சியுமே //
மகிழ்வோடு வாழ்த்துகிறேன்
வாருங்கள் சகோதரரே...!
Deleteஉங்கள் வருகையும் கருத்தும் கண்டு உள்ளம் குதூகலிக்கிறது.
மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன்.....!
The flow of language is gentle and very rich in meaning.I am running on the banks of a mighty river.I enyoy,appreciate and wonder the flow, but not able to get into the river.May be the Bloggers meet will bring some one to teach me swimming.Then ofcourse you can see and feel the champion.good expression.
ReplyDelete