Tuesday, September 1, 2015

பூந்தளிரே உன்முகத்தைக் காட்டு!




Image result for சரஸ்வதி images


 பூமகளே பொன்மகளே போடுகிறேன் முத்துநகை  
      பூந்தளிரே உன்முகத்தைக் காட்டு!
            பூவகையை  பாவகையுள் பொன்னெழிலாய்க் கோர்த்திடவே
                   பொற்புடனே நல்லருளைச் சூட்டு!

நாமகளே நல்லதமிழ் நாவினிலே ஊறிவர  
        நல்லறிவை நெஞ்சினிலே நாட்டு!
             நானிலமும்  சேர்ந்துவந்து நானெழுதும் சிந்தனையை
                நாடிடவே தந்திடுவாய் பாட்டு !  

  கோமகளே கொஞ்சுதமிழ்க்  கோலமிடும் கைங்கரியம்
        கொண்டுவந்து என்றனுக்கு நீட்டு !
             குற்றமற்ற தீந்தமிழில் கூவிடவே வேண்டுகிறேன்
                 கொத்துடனே கொண்டுவந்து ஊட்டு !

பாமகளே உன்றனுக்குப் பாற்குடமாய் வார்த்திடுவேன்
       பண்புடனே பாவணியைத் தீட்டு!
           பத்துவிரல் மோதிரமும் பார்த்துனக்கு போட்டிடுவேன்
                பாங்குடனே என்னறிவைக் கூட்டு!









38 comments:

  1. குற்றமற்ற தீந்தமிழில் கூவிடவே வேண்டுகிறேன்
    கொத்துடனே கொண்டுவந்து ஊட்டு!..

    அருமை.. அழகு!..
    நல்லதொரு கவிதை!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! முதல் வருகைக்கும் இனிய கருத்துக்கும்.

      Delete
  2. ஆஹா! நாமகளுக்கு நற்றமிழில் சூடிய பாமாலை பாடிடும் போதே நெஞ்சம் இனிக்கிறது..இனியா தொடுத்த மாலை ஆதலாலே இனிக்கிறது.
    அற்புதம் தோழி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா சும்மா தான் முயற்சி செய்து பார்த்தேன் மா ...தங்கள் இனிய கருத்துக் கண்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது வே எனக்கு பெரிய ஊட்டம். நன்றிம்மா ! பாவலர்கள் சொன்னால் அதை விட சந்தோஷம் வேறென்ன.

      Delete
  3. இனியா அசத்தீற்றீங்க போங்க அப்பாட என்ன ஒரு ஆளுமை
    கவிஞர் தோழியே !வாழ்த்துக்கள் மென் மேலும் வளர்ச்சி காண
    வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. அன்புத் தோழியே! அம்பாளே சொன்னது மாதிரி மகிழ்ச்சியாகவே உள்ளதும்மா தங்கள் இனிய வாழ்த்தும் கருத்தும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியே. மிக்க நன்றி வராவுக்கும் வாழ்த்திற்கும்!

      Delete
  4. ஆஹா ஆஹா,,,,,,
    பாமாலைத் தொடுத்த பாமகளே உமக்கு
    வாழ்த்துக் கவி மாலைத் தொடுத் தனுப்ப
    நானும் வார்த்தைத் தேடினால் எல்லாம்
    இனியாவின் கரங் களிலே
    மலரின் மதுஉண்ட வண்டு போல்
    மயக்கத்தில் தங்கள் பாவால்
    வாழ்த்துக்கள்,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. அட இது என்ன நீங்கள் பேசுவதே கவிதை தானேம்மா அப்புறம் என்ன அழகாக வந்திருக்கிறதே வாழ்த்து. மிக்க மகிழ்ச்சிம்மா. பேராசிரியருக்கும் நிச்சயம் வரும் எனவே முயற்சி செய்யுங்கள்.ok வா மிக்க நன்றிம்மா வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!

      Delete
  5. அழகான அற்புதமான கவிதை சகோ.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  6. நா பாடும்போதே நாமகள்
    நாவினை இனிக்கச் செய்கிறாள்.எனின்
    எனின் அது
    இனியாவுக்கு இயைந்த வரம்.

    பாடுங்கள் இனியாவுடன்

    லிங்க் சற்று நேரத்தில்

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தாத்தா ! எல்லாம் தங்களைப் போன்றோர் ஆசீர்வாதம் தான் தாத்தா. பாடிப் பெருமை சேர்க்கும் தங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் ஆண்டவன் கிருபை எண்ணும் தங்களுக்கு உண்டு. மிக்க நன்றி!

      Delete
  7. www.youtube.com/watch?v=uALs2peblMA

    your composition is here being sung by me.

    subbu thatha.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தாத்தா எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். உடனும் பாடி அசத்திவிட்டீர்களே கண்கள் நீர் மல்க சிலையாகி நிற்கிறேன் ஐயா. இப்பாவின் எழிலைக் கூட்டிற்று ஐயா. தங்களின் ராகத்திலும் குரலிலும் மிளிர்கிறது கவிதை. என்ன தவம் செய்தேன். தங்களைப் போன்றோரின் நட்புக்கு தலை வணங்குகிறேன் தாத்தா. நன்றி நன்றி நன்றி ....!
      வாழ்க வளமுடன் ...!

      Delete
  8. So enchanting this song that i again sang in pure raag Sindhu Bhairavi.
    shall be posting in my blog expecting your permission.
    subbu thatha.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. sure தாத்தா என்னுடைய பெர்மிசன் எதற்குத் தாத்தா நிச்சயமா நீங்கள் போடலாம் மிக்க நன்றி !

      Delete
  9. என்ன இனிமை! மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது தோழி!
    வார்த்தைகள் வளமாக வரிசையாக வந்து விழுந்துகிடக்கின்றன!

    மிக மிக அருமை! தொடருங்கள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் என் அன்புத் தோழியே தங்களைப் பார்த்துத்தான் முயற்சி செய்தேன் அம்மா or ஆர்வத்தில். அதை தாங்களே நன்று என்று சொல்லும்போது அதை விட வேறு எனக்கு என்ன வேண்டும் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது ஹா ஹா உங்களுக்குத் தான் நான் முதலில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். நன்றிம்மா வாழ்த்துக்கள்...! என்றும் தங்கள் நட்பில் திளைப்பேன்.

      Delete
  10. அருமை கவிஞரே மிகவும் ரசித் தேன்தமிழ் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் ரசித்தமைக்கும் வாழ்த்துக்கள்...!

      Delete

  11. வணக்கம்!

    பூமகளே! பொன்மகளே! பொங்குதமிழ் பூத்தாடும்
    பாமகளே! கன்னற் பழச்சுவையே! - நாமகளே!
    சிந்தை சிலிர்க்கின்ற விந்தைக் கவிபடைத்தாய்!
    முந்தைப் புகழை மொழிந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா வணக்கம்!
      தங்களது பார்வைபட பாரெல்லாம் தேன்போல் சொரியும் பாக்கள் ஐயா ! தங்கள் கருணையில் மேலும் மிளிர்வேன். நன்றி நன்றி ! வருகைக்கும் இனிய வெண்பா பின்னூடத்திற்கும் வாழ்க வளமுடன் ...!

      Delete
  12. நாமகள் துதி அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் ..!

      Delete
  13. கேட்டதெல்லாம் குறைவின்றி முன்பே தந்து விட்டாளே நாமகள் உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் ..!

      Delete
  14. அன்புள்ள சகோதரி,

    எழிலாய்ப் பாடிட்ட பாட்டு
    தமிழின் அழகினைக் கூட்டும்.

    நன்றி.
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் ..!

      Delete
  15. குற்றமற்ற தீந்தமிழில் கூவிடவே வேண்டுகிறேன்
    கொத்துடனே கொண்டுவந்து ஊட்டு !//

    ஆஹா! சகோதரி நீங்களும்தான் அழகு பைந்தமிழை எங்கள் எல்லோருக்கும் ஊட்டிக் கொண்டிருக்கின்றீர்கள்! அருமை!! ரசித்தோம்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் ரசித்தமைக்கும் வாழ்த்திற்கும் ..!

      Delete
  16. வணக்கம் சகோ !

    இன்றமிழில் சொரிகின்ற இனியாவின் பாமாலை
    இன்னுயிரை நனைக்கிறதே இன்று
    இறையுள்ளம் மகிழ்கின்ற இன்னிசையின் சந்தத்தில்
    இலக்கியத்தேன் வடிகிறதே நன்று !

    நானும் கிறுக்கிப் பார்த்தேன் உங்களைப்போல் வரவில்லையே
    அவ்வ்வ்வ் .......!
    மிக மிக அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. அட இதென்ன பாவலரே நீங்களே இப்படி சொல்லலாமா. இதானே வேணாங்கிறது இப்படியா என்னைக் கலாய்க்கிறது. நீங்கள் எங்கே நான் எங்கே ஏணி வைத்தாலும் எட்டாதே ஹா ஹா தங்கள் வருகையும் தன்னம்பிக்கை ஊட்டும் இனிய கருத்துமே எனக்கு பெரிய ஆதாரம் மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் ...! அடிக்கடி வர முயற்சி செய்யுங்கள் கவிதையும் இடுங்கள் பார்க்க ஆவலாக உள்ளேன் ...!

      Delete
  17. நாமகள் நல்ல தமிழ் ஊறிவற
    ஏற்கனவே தங்களுக்கு அருளிவிட்டார் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் ..!

      Delete
  18. இனியாச்செல்லம் பாடல் நல்ல இருக்கு :) நான் பின்னூட்டங்களையும் சேர்த்து வாசிக்கிறேன். அதில்தானே தோழியின் இனிய புன்னகையை நுகர முடிகிறது!

    ReplyDelete
    Replies
    1. அம்முவைக் கண்டதுமே அகம் முகம் எல்லாம் தன்னால மின்னும்மா. வராத போது வாடி விடுகிறது. ஆகயால் அடிக்கடி வாருங்கள் ok வா நற்குறும்புகள் புரியுங்கள் ok வா அம்முக்குட்டி ...மிக்க நன்றிம்மா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கள் ...!

      Delete
  19. அழகான கவிதை. நல்ல ரசனை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் ..!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.