Sunday, February 1, 2015

பாயும் புலியும் கேட்டால் பதுங்கி தானே கிடக்கும்

 

 ஆயர்பாடி கண்ணா வலை
மோதுகின்ற நெஞ்சா
காலை மாலை எல்லாம் 
அக்கன்னியர்கள் பின்னால்
 உன் மோனகானம் கேட்டு அவரும்
 மடியில் தஞ்சம் புகுவார் 

தூயநெஞ்சில் அந்த ராதை 
குடியிருந்து கொள்வாள்
கண்ணில் காதல் கொண்டே அவளும் 
மண்னை வாழவைப்பாள்
அவள் எண்ணம் முழுதும் உந்தன் எழிலில் 
லயித்துக் கிடக்கும்  உம்கவனம் முழுதும் 
எம்மை காத்துத் தானே  கிடக்கும்

மாயக் கண்ணன் உன்னைக் காண 
மயிலும் வந்திருக்கு இசைகானம் 
கேட்டுத் தானும் ஆடிக் களிக்க வென்று  
கூடிக்களிக்கும்  உந்தன் குலவு கவிதை கேட்க 
பேசும் கிளியும் பறந்துவந்து 
பக்கம் நின்று  பார்க்கும்
பாடும் குயிலும் உமையே 
பாடத்தானே துடிக்கும்
காடும் மலையும் உம்தன் 
காலடியில் தானே கிடக்கும்

 காயம் முழுதும் உந்தன் கானம் 
கேட்டு  சிலிர்க்கும்  
பாயும் புலியும் கேட்டால் 
பதுங்கி தானே கிடக்கும் 
ஓடும் நதியும் கேட்டு உறைந்து 
போகும் கண்ணா

ஓரறிவு உள்ள  மரமும் 
உமையே உருகி உற்று நோக்கும்
வேணு கானம் கேட்க
அந்த விதையும் எழுந்து நிற்கும்  

சாயவேண்டும் நானும் உந்தன் 
நிழலில் தானே கண்ணா
கோபம் கொள்ள வேண்டாம் 
உன் குழந்தை தானே நானும்
 என் பாவம் முழுதும் தள்ளு
உனைக் காண வேண்டும் நில்லு

எண்ணும் போது உனையே  நான் 
எளிதில் அடைய வேண்டும்
 உருகி என்றும் உமையே  

நானும்  பண்ணில் பாடவேண்டும்
 நினைவில் தோன்றும்  உந்தன்காட்சி
 கண்ணில் நிறைய வேண்டும்   

33 comments:

  1. எண்ணத்தில் உதித்த தங்களது கண்ணக்கவி அருமை சகோ வாழ்த்துகள்.
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ மிக்க நன்றி உடன் வருகைக்கும் கருத்துக்கும்....
      இடை யடையே தான் வரமுடிகிறது சகோ இப்போ கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் ok வா.

      Delete
  2. பாயும் புலியும் கேட்டால்
    பதுங்கித் தானே கிடக்கும்
    ஆயும் நெஞ்சம் எல்லாம்
    அடிமை யாகத் துடிக்கும்!
    தீயும் பனியாய் மாறும்
    தீங்கைக் கொன்று கடக்கும்!
    மாயக் கண்ணன் பாடல்
    மனதில் கவிதை படைக்கும்!

    தனக்கொரு சந்தம் செய்து தமிழினில் போகும் பாடல் அருமையம்மா!

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மாயக் கண்ணன் மனதை
      மகிழ செய்து ரசிப்பான்
      தாயும் பிள்ளை போல
      தரணி எங்கும் சிலிர்ப்பார்
      வாயும் வயிறும் போல
      வாழ்க்கை முழுக்க சிரிப்பார்

      தடம்புரள் கின்றதோ நற்தமிழ் பாக்கள்
      இடம்மாறி நிற்கும் இலக்கணம் ஓசை
      கடனே எனஎழுத எண்ணவில்லை நானும்
      ஜடமென் ரெண்ணாதும் மனது !

      மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      Delete
  3. வணக்கம்
    அம்மா.
    கண்ணன் பாட்டு வரிகளை இரசித்து படித்து மகிழ்ந்தேன்... பகிர்வுக்கு நன்றி.
    ம்ம்...ம்ம்... வருங்கால பாடலாசிரியராக வர சந்தர்ப்பம் உண்டு.... தொடருங்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! ரூபன் வருகைக்கும் கருத்துக்கும். பாடல் ஆசிரியராக நான் சும்மா கலாய்க்காதீங்க ரூபன்.

      Delete
  4. மாயக்கண்ணனைத்தான் தேடுகிறீர்கள்.. அருமையான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. மாயக் கண்ணன் என்பதால் தான் தேட வேண்டியிருகிறது. இல்லையா ஒளிந்து கொண்டல்லவா இருக்கிறான் தூணிலும் துரும்பிலும். மிக்க நன்றி விச்சு வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  5. மயக்குவான் கண்ணன் பாடல் வரிகளில்..

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை மிக்க மகிழ்ச்சி ! தொடர வேண்டுகிறேன். மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      Delete
  6. கண்ணில் நிறைந்து...வருவான்
    அருமையான கண்ணன் கவி சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உமா! வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  7. மாயக் கண்ணனைக் குறித்த தங்கள் வரிகள் மாயக் கண்ணனைப் போல மாய்மாலம் செய்து எங்களை மயக்கியது!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ கீதா எப்படி இருக்கிறீர்கள்.ம்..ம்.. இடைக்கிடை வந்து தலை கட்டாவிட்டால் என்னை மறந்து விடப் போகிறீர்கள் இல்லையா? அது தான் மாயவனை துணைக்களைத்து வந்தேன்.
      ஹா ஹா மிக்கநன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  8. அருமை சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ நலம் தானே? மிக்கநன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  9. மாயக்கண்ணனின் காட்சியில்தங்களின் கண்கள் நிறைய வேண்டும் சகோதரி அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையில் மிகவும் மகிழ்ந்தேன். தொடருங்கள் தொடர்கிறேன். மிக்க நன்றி வருகைக்கும், இனிய கருத்திற்கும்.

      Delete
  10. Replies
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும். நீண்ட நாட்களின் பின் தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி !

      Delete
  11. ஓரறிவு உயிறும் உற்றுக்கேட்கும். ஒவ்வொரு வரியும் அருமை. தாங்கள் கண்ணன் மேல் கசிந்துருகியது கண்டு கண்ணன் வருவார்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா ! வருகைக்கும் கருத்துக்கும் .
      ஆபத் பாண்டவன் ஆயிற்றே கசிந்துருக வருவான் குறை தீர்க்க. வாழ்த்துக்கள்மா !

      Delete
  12. இதுக்கு என்ன சொல்ல?? மெட்டு, வரிகள் எல்லாம் சூப்பர் செல்லம்:)

    ReplyDelete
    Replies
    1. அட எட்டிப் பார்த்து விட்டீர்களா ? பறவாய் இல்லடா அம்மு நான் புரிந்து கொள்வேன். ok வா இருந்தாலும் நன்றி நன்றி ! மிக்க மகிழ்ச்சிம்மா.

      Delete
    2. Anandha bhairavi ragathile mettu pottu link valaicharathile thanthu irukken.pl listen
      Subbu thatha

      Delete
  13. கடவுள் ரொம்ப பர்பஃகட்டாக இருந்தால் பக்தசிகாமணிகளுக்கு ரொம்பவே போர் அடிச்சுடும்ணுதான் நம்ம "கண்ணன்" எல்லாலீலைகளும் செய்கிறாராம். ராதையை காதலிப்பது, மற்ற பெண்களை டீஸ் பண்ணுவது. இந்துக்கடவுள்களில் சிறப்பம்சமே, கடவுளும் சில பல குறைபாடுகள் உள்ளவனாகவே இருப்பான் என்றார் ஒரு அயல்நாட்டவர்..

    ***காயம் முழுதும் உந்தன் கானம்
    கேட்டு சிலிர்க்கும்
    பாயும் புலியும் கேட்டால்
    பதுங்கி தானே கிடக்கும் ***

    அடடா என்ன ஒரு கற்பனை!! :-) வாழ்த்துக்கள்!

    -----------------------

    இது வம்பு...

    ஒரு வேளை கண்ணன் சமஸ்கிரதத்தில் பாடினாரோ??

    ஆனா ஒண்ணு இனியா, கண்ணன் இனிய தமிழ்ல பாடியிருந்தால், புலி பதுங்கமால் அவர் முன்னால வந்து டாண்ஸ் ஆடியிருக்கும்!:)))

    டேக் இட் ஈஸி இனியா! :)))

    ReplyDelete
  14. வாங்க வருண் எப்படி இருக்கிறீங்க.தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும் பதில் உடனும் இடமுடியல ரொம்ப busy.ஆமா கண்ணன் தனக்கு போர் அடித்து என்று இல்லை பக்த சிகாமணிகளுக்கு போர் அடிக்காமல் இருக்கட்டும் என்று தானா இந்த லீலைகள் ok ok நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

    ம்..ம்..ம்\\\\ ஆனா ஒண்ணு இனியா, கண்ணன் இனிய தமிழ்ல பாடியிருந்தால், புலி பதுங்கமால் அவர் முன்னால வந்து டாண்ஸ் ஆடியிருக்கும்!:)))ஓ அதுவா புலி பத்தி தெரியலை தமிழ் புரியும் என்று நினைக்கிறேன் அதனால தான் அது பயபக்தி யோடு பதுங்கியது

    அதுவுமில்லாமல் தமிழில் பாடாவிட்டால் எப்படி என் காயம் சிலிர்க்கும் சொல்லுங்கள் அதனால தமிழில் தான் பாடியிருப்பார் ஓகேவா வருண் .ஹா ஹா மிக்க நன்றி வருகை க்கும் கருத்துக்கும் !

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. எப்படி இது அழிந்தது என்று தெரியவில்லை தோழி இதை இப்பொழுது தான் கவனித்தேன். மன்னித்து மீண்டும் கருத்திடும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி !

      Delete
  16. உன்னைக் காண வேண்டும் நில்லு...ஆர்டர் போட்டுடீங்களே.. :)
    நலமா தோழி?

    ReplyDelete
  17. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  18. என்றோ சகோதரி இனியா அவர்கள் எழுதிய பாடல்!
    இன்று வலைச் சரத்தின் மூலம் பாராட்ட பட்ட அந்த பாடலை,
    திருசுப்புதாத்தா அவர்கள் கேட்டு, ஒலிப்பதிவு செய்து யூ டிப்பில் (you tube) பாடி வெளியிட்ட செய்தி இரட்டிப்பு மகிழ்வை தந்தது.
    இது நிச்சயம் "குழலின்னிசைக்கு" மட்டற்ற மகிழ்ச்சி!
    நன்றி அய்யா!
    பெருமைக்கு பெருமை சேர்த்தமைக்கு!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  19. The link to ypur song is in Valaicharam.
    Did u hear ?
    S.t

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.