ஆனை கறுத்ததென்று
தந்தத்தை வெறுத்தாரா
தீயது கொளுத்தும் என்று
தீபத்தை அணைத்தாரா
வேம்பு கசக்கும் என்றே
விலக்கியே வைத்தாரா
வீணை அழுகுதென்று
வீசியே எறிந்தாரா
வானம் கறுத்ததென்று
மழை நீர் உறுத்தியதா
வாடிடும் மலர்கள் என்று
மாலைகள் சூடலையா
மின்னல் தோன்றியதால்
ஜன்னல் மூடியதா
சிவந்திடும் கன்னமென
நாணம் விலகியதா
குட்டியை விலக்கி வைத்தால்
குரங்கினம் ஆகாதா
சிறு பிள்ளை வேளாண்மை
சிறைச் சேதமாகிடுமா
மழலை பேசுவது
மந்திரம் ஆகிடுமா
தந்திரம் தெரிந்திருந்தால்
விந்தைகள் புரிவாரா
இறைநாமம் சூடினால்
இறைவன் என்றாகிடுமா
ஆலயம் இல்லையென்றால்
ஆண்டவன் இல்லையா
கடலில் குளிப்பதனால்
கரைந்திடுமா வஞ்சம்
கவலை படுவதனால்
களித்திடுமா நெஞ்சம்
இறப்பு நிச்சயமே
பிறப்பு தொடரலையா
புயல்வந்த பின்னாலே
அமைதி காணலையா
வாழ்வு சரிந்தது என்று
வையகம் வெறுத்திடுமா
வானவில் தோன்றுவதால்
இயற்கையழகை இழந்திடுமா
வண்ணநிலவு வருவதனாலே
எண்ணஓட்டம் குறைந்திடுமா
கண்கள்ளிரண்டும் மூடியதும்
வண்ணம்முழுதும் மறைந்திடுமா
நினைப்பது நடப்பதில்லை
நடப்பதை நினைத்ததில்லை
விழுவதெல்லாம் எழுவதற்கே
அழுவதெல்லாம் சிரிப்பதற்கே
தோல்வியை தழுவ
வெற்றிகள் காணும்
துன்பங்கள் சூழ
இன்பங்கள் தொடரும்
நிலைப்பது இல்லை எதுவும்
நிம்மதி காணும் உறவே
தடுத்திட முடியாதெவரும்
தரித்திரம் விலகும் உறவே
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
தோல்வியை தழுவ
வெற்றிகள் காணும்
துன்பங்கள் சூழ
இன்பங்கள் தொடரும்
என்ன வரிகள் கவிதையில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது...சிறப்பாக உள்ளது.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்..அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
கவிதையின் வரிகள் வாசிக்க வாசிக்க என்மனதை திகட்ட வில்லை...நன்றாக உள்ளது அதற்கு உரிய வகையில் படங்கள் எல்லாம் அழகாக உள்ளது..... வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன் !
Deleteதங்கள் முதல் வருகையில் அகமகிழ்ந்தேன். தங்கள் இனிய கருத்துக்கள் வழமை போல் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் நல்கும். நம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமையும்.மிக்க மகிழ்ச்சி.!
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !
வாழ்க வளமுடன்....!
நினைப்பது நடப்பதில்லை
ReplyDeleteநடப்பதை நினைத்ததில்லை..
விழுவதெல்லாம் எழுவதற்கே
அழுவதெல்லாம் சிரிப்பதற்கே!..//
அருமை.. அருமை.. நல்லதொரு பதிவு.
வணக்கம் சகோதரா !
Deleteவருகையும் கருத்தும் கண்டு நிம்மதியும் சந்தோஷமும் கொண்டேன்.
மிக்க நன்றி..! வாழ்க வளமுடன்....!
துவண்ட மனங்களை தூக்கி நிறுத்தும் கவிதை.
ReplyDeleteஅருமை தோழி!!
வாருங்கள் தோழி !
Deleteதங்கள் தயவால் சகோதரர் முத்துநிலவன் அவர்கள் வந்திருந்தார்கள்.மனம் துவண்டிருக்க தூக்கி நிறுத்தி விட்டார் தெரியுமா. அவருக்கு என் பல கோடி நன்றிகள். தோழி தங்களுக்கும் சகோதரர் மதுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
ஊக்கம் தரும் கருத்து கண்டு உள்ளம் பூரித்தது.
நன்றி வாழ்க வளமுடன்....!
சிறப்பாகவும் முடித்துள்ளீர்கள்...
ReplyDeleteவரிகள் மனம் கவர்ந்தன...
வாழ்த்துக்கள்...
வாருங்கள் சகோதரரே!
Deleteசிறப்பான கருத்து இட்டு
சிந்தை மகிழ வைக்கும் சிற்பியரே
செந்தமிழ் வாழ செய்திடும் வளர்த்திடும்
சிந்திடும் உம் வார்த்தைகள்..!
நன்றி வாழ்க வளமுடன்....!
ரொம்ப அருமையான கவிதை கவிஞரே ...
ReplyDeleteவாழ்த்துக்கள் ..
வரிகள் மிக அழுத்தமான பாதிப்பை தருகின்றன.
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
நினைப்பது நடப்பதில்லை
வணக்கம் மது ! வாருங்கள் !
Deleteஇதயம் கனிந்த வாழ்த்துக்கள் இனித்தன
கனத்த இதயம் கனிந்தது இல்லை ஒரு பயம்
என நம்பிக்கை உறுதிதரும் கருத்து கண்டு மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி ..! வாழ்க வளமுடன்....!
மிகவும் அருமையான தன்னம்பிக்கையான வரிகள் .காலம் அனைத்தையும் மாற்றும் வலிமை மிக்கது .தோழி எழுவதற்கே பிறந்துள்ளோம் .உங்கள் வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றது .வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteமிக்க நன்றி !வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!
Deleteஅப்பப்பா! அருமை கவி வரிகள்!
ReplyDeleteமுழுவதும் மிக நன்றாக உள்ளது.
இனிய வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
மிக்க நன்றி !வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!
Deleteதன்னம்பிக்கையும் உற்சாகமும் ஊட்ட வல்லவையாக .உங்கள் கவிதை வரிகள் திகழ்கின்றன. ஆரம்பத்தில் தன் முறம் போன்ற காதுகளை ஆட்டியபடி வரவேற்கும் விநாயகரின் அம்சமும் வெகுவாக ரசிக்க வைத்தது. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்தைக் கண்டு கொண்டேன். அழகிய கவிதை தந்த உங்களுக்கும், வலைச்சர அறிமுகம் தந்த என் ஃப்ரெண்ட் மஞ்சுபாஷிணிக்கும் மகிழ்வுடன் என் நன்றி!
ReplyDeleteவணக்கம் சகோதரா ! வாருங்கள் !தங்கள் வருகை கண்டு உவகை கொண்டேன். உற்சாகம் தரும் அருமையான கருத்தை வழங்கி நம்பிக்கையூட்டியது மகிழ்ச்சியே. தொடர்ந்து ஆதரவுதர வேண்டுகிறேன்.அறிமுகத்திற்கும் மிக்க நன்றி..! நானும் தொடர்கிறேன். வாழ்க வளமுடன் ....!
Deleteதோழி மஞ்சுபஷினிக்கும் என் மனமர்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்....!
மிக அருமையான கவிதை தோழி..துவண்ட மனதை துள்ளி எழ வைக்கும்..
ReplyDelete//வானம் கறுத்ததென்று
மழை நீர் உறுத்தியதா
வாடிடும் மலர்கள் என்று
மாலைகள் சூடலையா// மிக அருமை
வாருங்கள் தோழி மிக மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் வரவு.
Deleteமிக்க நன்றி !வருகைக்கும் வாழ்த்திற்கும் ...! வாழ்த்துக்கள் தோழி ...!