மாதவம் செய்திடல் வேண்டும்
மாதவனே உன்தாள் பணிய -மூங்கில்
போன்ற தோளுடையா னகமலர்வான்
மாலை மலர்கள் தூவ
நீடு வாழ்ந்திட நிதமும்
சேவிக்க வேணுமும் நாமம்
நீற ணிந்தால் நெற்றியிலே
பாழ் படுமே பாவம்
ஆழிக் கடலில் வீற்றிருந்து
ஊழித் தீயை அணைப்பாய்
பேரழிவை தடுத்திடவே
தோன்றிடு வாய் விருப்பாய்
வேழம் வளர்ப்பது போல்
தோன் றிடாது வாழ்வு
வீழும் வாழ்வை காத்திடவே -துயர்
வீழும் பார்வை வீசிடவே
பாழும் உலகில் நாளும்
கொடுமை தணிய வேண்டும்
கொடுங் கூற்றன்கூட கண்டு
விலகி ஓட வேண்டும்
பாம்பின் மீது பள்ளி
பார்த்திபன் ஏன் தள்ளி
தீபம்ஏற்ற நீயும் எமை
திரும்பி பார்க்க வேண்டும்
ஊடுருவி எம் உணர்வில்
உயிரில் கலக்க வேண்டும்
உறைந்திருக்கும் ஊழ் வினையோ
உருகி ஓட வேண்டும்
கார் குழலை கண்டதுமே
பின்இழுப்பாய் கார்மேக கண்ணா
வெண்ணெய் திருடி உண்ணும்
வேய்ங்குழல் ஊதுகின்ற வண்ணா
மாதர் சூழும் போது
மலர்ந்திடும் உம் வதனம்
ஆண்டாள் சூடிக் கொடுத்த
மாலை சூடிக் கொண்ட போதும்
மாதங்களில் மார்கழியே உம்
மனதிற் கினிய மாதம்
மாதர்களும் மகிழ்ந்து பாடி
துயில் எழுப்பும் நேரம்
தீயினிலும் கலந்தி ருப்பாய்
தூணிலும் நிறைந் திருப்பாய்
பாரினிலும் பரந்து இருப்பாய் -பேரொளியாய்
உள்ளத்தே உறைந்திடுவாயே
மாதவம் செய்திடல் வேண்டும்
ReplyDeleteமாதவனே உன்தாள் பணிய!..
அழகான கவிதை.. மகிழ்ச்சி!..
வாருங்கள் சகோதரரே !
Deleteதங்கள் உடன் வருகை மிகுந்த உவகை தரும்
ஊக்கமதை ஊட்டிடும் நிஜமாய்!
மிக்க நன்றி ...! வாழ்க வளமுடன்....!
ஊடுருவி எம் உணர்வில்
ReplyDeleteஉயிரில் கலக்க வேண்டும்
உறைந்திருக்கும் ஊழ் வினையோ
உருகி ஓட வேண்டும்
உள்ளம் நிறைந்த பிரார்த்தனை..!
வாருங்கள் தோழி !
Deleteமிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
வாழ்க வளமுடன்.....!
அழகான அருமையான கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வணக்கம் சகோதரரே !
Deleteதவறாமல் வருகையும் ஊக்கமும் தந்து கருத்தும் வாழ்த்தும் இட்டு விடும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
மிக்க மகிழ்ச்சி சகோதரரே...!
வாழ்க வளமுடன்.....!
படங்களும் கவிதை வரிகளும் வெகு சிறப்பு !
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி இனியா மாதவம் செய்திடல்
வேண்டும் மாயக் கண்ணனவன் திருவடிகளைப் பணிந்திடவே .
வாருங்கள் தோழி ! ரொம்ப மகிழ்ச்சி
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி......!
வாழ்க வளமுடன்....!
வாருங்கள் தோழி !
Deleteதங்கள் வருகையும் கருத்தும் எப்போதும் தரும் தென்பு.
மிக்க மகிழ்ச்சி அம்பாள் ....! வாழ்க வளமுடன்....!
அன்பு சகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteஎம்மதமும் சம்மதமும் என்பது போல் எல்லா தெய்வங்களையும் கவியால் அர்ச்சனை செய்யும் தங்கள் கலைதிறன் வியப்பாக இருக்கிறது. மிக அருமையான வரிகள். அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பிறக்க உங்களது வேண்டுதல் உதவட்டும். பகிர்வுக்கு ரொம்ப நன்றி சகோதரி..
வாருங்கள் சகோதரா !
Deleteஒவ்வொரு முறையும் மனமுவந்து வழங்கும் கருத்துக்கள் என் நெஞ்சை தொடும். ஊக்கம் தரும் வகையிலேயே அவை அமைந்திருக்கும்.
மிக்க நன்றி சகோதரா ....!
எல்லா நலன்களும் பெற்று இன்பமாய் வாழ வாழ்த்துகிறேன்....!
வணக்கம்
ReplyDeleteஅம்மா
நல்ல வார்த்தைகள் கலந்திருக்கு
எங்கள் ஆழ்மனதில் நிறைந்திருக்கு
வாசக உள்ளங்களுக்குஉணர்வு மிக்க கருத்துக்கள்
உள்ளத்தில் தங்கள் கவி நிறைந்திருக்கு
என்ன வரிகள் அம்மா... சிறந்த கருத்தாடல் மிக்க வரிகள்...இந்த வலையுலகில் மேலும் பல கவிதைகள் மலர எனது வாழ்த்துக்கள் அம்மா...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன் !
Deleteதங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த உற்சாகத்தையும்.மேன்மேலும் கவிதை எழுத உந்துதலாகவும்
உள்ளது.
கண்ணனின் மென் பார்வை உந்தனை நோக்கிட
சந்ததி காத்திடும் சர்வமும் நிலைத்திடும்....!
மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன் ....!
இறையும் மறையும் இனிதாகும் வாழ்வில்
ReplyDeleteநிறையும் குணத்தாள் நினைவில் - முறையே
பெருகும் தெளிவு பொழியும் தமிழைத்
தருவின் இளமாய் தளிர்த்து !
அருமை சகோ
எல்லா கடவுளையும் ஒருமித்த
ஒரே கவிதை அருமை அருமை
வாழ்த்துக்கள்
தொடரட்டும் கவிப்பயணம்
வாழ்க வளமுடன்
வாருங்கள் சீராளா!
Deleteவெகு நாட்களின் பின்னர் வருகை மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். மன நிறைவு தரும் கருத்தும், மனம் நெகிழ்ந்தது.
கண்ணன் குழல் ஓசையாய்
உள்ளம் மகிழ்வாய் வெள்ளம்
என பெருகி வரும் கள்ளமற்ற
கவிதைகளை தந்து நிறைவாய்...!
மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன்.....!
வடிமமைப்பு அருமை
ReplyDeleteபடத்தேர்வும் அருமை
கவிதை செழுமை...
வாழ்த்துக்கள்
வணக்கம் மது! வாருங்கள்.
Deleteவாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா.
வாழ்க வளமுடன்....!
கவிதை அழகு.
ReplyDeleteபாடுவேன்.
சற்று நேரத்தில் யூ ட்யூபில் வரும்.
உங்கள் இ மெயில் ஐ. டி.தந்தால் நேரடியாக அனுப்புகிறேன்.
சுப்பு தாத்தா.
அப்படியே ஆகட்டும் தாத்தா மிக்க நன்றி...!
Deleteதங்கள் வலைப் பக்கத்தில் இட்டுள்ளேன்.
தங்கள் கருணைக்கு தலை வணங்குகிறேன் தாத்தா.
எல்லா நலன்களும் பெற்று நிறைவுற வாழ வாழ்த்துகிறேன்....!
வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!
ReplyDeleteஅருமை சகோ..!!!
தொடர வாழ்த்துக்கள் ...!!!
கவிதை வரிகள் அருமை. படங்களும் வரிகளும் போட்டிபோடுகின்றன யார் மிக அழகு என்று.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி.
பறவாய் இல்லை சகோதரா அழகில் யார் வெற்றி பெற்றாலும் எனக்கு சந்தோஷம் தான் ஹா ஹா.! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா !
Deleteஇனியா குட்டி என்ன செய்கிறார் நலம் தானே!