அம்மா என்றழைப்பதிலே எத்தனை சுகம்
அருகினிலே இருக்கையிலே எத்தனை பலம்
அன்பினிலே தெரிகிறதே எத்தனை முகம்
தினம் மனதார தந்திடுவார் ஆசீர்வாதம்
ஊனினையே உருக்கியவர் உயிர் கொடுப்பார்
உதிரத்தையே பாலாக்கி ஊட்டிடுவார்
கண்ணின் மணி போல காத்திடுவார்
தன்னலமே இன்றி அவர் பேணிடுவார்
பெற்ற வலியினையே தாங்கி வலிமையாகிறார்
பொறுமைதனைக் கொண்டு பெருமை கொள்கிறார்
கருணையே வடிவமாக காட்சி தருகிறார்
தாயிற் சிறந்த கோவில் இல்லை என்று பேர் எடுக்கிறார்
துயரத்தின் சிகரத்தில் இருப்பார்
குழந்தை முகம் பார்த்து அவர் மறப்பார்
அழும் போது தருவரே ஆறுதல்
அணைப்பினிலே கிடைத்திடுமே தேறுதல்
குணத்தினிலே ஒரு போதும் இல்லை ஒரு மாறுதல்
அம்மாவின் இடத்தை இன்னும் நிரப்பவில்லை யாரும்
அவர் அன்புக்கு ஈடு இணை எங்கேயும் இல்லை
அவர் காலடியை தொழுதிருந்தால் போதும்
நன்மைகளே தொடர்ந்திருக்கும் நாளும்
அவர் பெருமை தனை பேச போதாது ஒரு யுகம்
எவருக்கும் அதை எழுத காணாது மதியுகம்
அவர்கள் செய்த தியாகங்கள் படைத்திடுமே பலயுகம்
No comments:
Post a Comment
வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி
வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.
நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.