கோவிலிலே கருவறை உண்டு தாயின்
கருவறையில் கோவிலும் உண்டு
குழந்தையும் தெய்வமும் ஒன்று
அந்த இருவருமே கருவறையில் ஒன்று
அந்த கோவிலும் புனிதமானதொன்று
கருவறையில் தொடங்குகின்ற வாழ்வு
அலை அலையாய் கொண்டு போகும் பாரு
மணவறையில் பூத்த புது உறவு அது
பள்ளியறையை அலங்கரிக்கும் ஒன்று
அங்கு கலந்து பகிர்ந்து கொண்ட அந்த அன்பு
தாயின் கருவறையில் மிளிர்ந்து சிறை கொள்ளும்
கருவாகி உருவாகி பெரிதாகி வருமே வெளியில்
பூவுலகை காண ஒரு நாளே அது தான் திருநாளே
துன்பங்கள் அறியாமல் அதுவும்
மழலை மொழி பேசி கொள்ளும்
அழுக்கு போக குளியலறையில் கழுவும்
பசியெடுத்தால் சமையலறை செல்லும்
படுக்கையறையில் துயில் கொள்ளும்
கொள்ள பழுதுகளை சரி செய்யும்
நல்லறிவு பெற கல்வி கலை கற்று
வாழ்க்கையினை வழி நடத்தும் நன்று
வாழ்க்கையிலே வந்து போனதெல்லாம்
வகுப்பறையில் கொண்டதுபோல் ஆகும்
படிப்படியாய் அறிவிழந்து உடல் தளர்ந்து போகும்
அது பிணவறையில் கொண்டு சென்று சேர்க்கும்
பின்னர் கல்லறையில் கதை முடித்து கொள்ளும்
கருவறையில் தொடங்கிய நம் வாழ்வு
கல்லறையில் சென்று அது முடியும்
கருவறையில் கோவிலும் உண்டு
குழந்தையும் தெய்வமும் ஒன்று
அந்த இருவருமே கருவறையில் ஒன்று
அந்த கோவிலும் புனிதமானதொன்று
கருவறையில் தொடங்குகின்ற வாழ்வு
அலை அலையாய் கொண்டு போகும் பாரு
மணவறையில் பூத்த புது உறவு அது
பள்ளியறையை அலங்கரிக்கும் ஒன்று
அங்கு கலந்து பகிர்ந்து கொண்ட அந்த அன்பு
தாயின் கருவறையில் மிளிர்ந்து சிறை கொள்ளும்
கருவாகி உருவாகி பெரிதாகி வருமே வெளியில்
பூவுலகை காண ஒரு நாளே அது தான் திருநாளே
துன்பங்கள் அறியாமல் அதுவும்
மழலை மொழி பேசி கொள்ளும்
அழுக்கு போக குளியலறையில் கழுவும்
பசியெடுத்தால் சமையலறை செல்லும்
படுக்கையறையில் துயில் கொள்ளும்
கொள்ள பழுதுகளை சரி செய்யும்
நல்லறிவு பெற கல்வி கலை கற்று
வாழ்க்கையினை வழி நடத்தும் நன்று
வாழ்க்கையிலே வந்து போனதெல்லாம்
வகுப்பறையில் கொண்டதுபோல் ஆகும்
படிப்படியாய் அறிவிழந்து உடல் தளர்ந்து போகும்
அது பிணவறையில் கொண்டு சென்று சேர்க்கும்
பின்னர் கல்லறையில் கதை முடித்து கொள்ளும்
கருவறையில் தொடங்கிய நம் வாழ்வு
கல்லறையில் சென்று அது முடியும்
No comments:
Post a Comment
வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி
வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.
நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.