Sunday, February 17, 2013

அன்பென்ற நதி




அன்பென்ற நதியிலே அனைவரும்
மூழ்கவே அனுமதி தந்ததாரு
அகிலங்கள் யாவையும் ஆளுகின்ற
சக்தி  அன்புக்கு உள்ளதாமே 

ஆனந்தமாகவே நீ நீராடு அதிலே 
ஆருயிர் போகு முன்னே 
ஆதவன் செய்கின்ற அன்பைபாரு 
அதிலேயே மூழ்கிறான் என்றும்பாரு 

வீசுகின்ற காற்றின் வித்தை பாரு
வீசாதிருந்தால் மூச்சு நிற்கும்பாரு
மண்ணின் மகிமையினை  எண்ணிப்பாரு 
அதற்கு எல்லா உயிரினமும் ஒன்றுபாரு 

மறக்காமல் அனைவரையும்  
சுமக்கின்றது மாண்டவரை  
மண்தின்னு முன்னே மீண்டும் 
வந்தாலும் ஏற்கின்றது

மரித்த பின்னரும் பெற்றவரும்
உற்றவரும் உதறி விட்ட 
போதும்  உதறாமல் மடிதனிலே  
உறங்க விடும் உள்ளம்

இவ்வுலகில்  யாவருக்கும்  வாராத போதும்   
தீராத பகை தன்னை  கொள்ளாதே போதும்
இவை பேதைமை கொண்டால் வாழ்வு ஏது
உயிரினங்கள் வாழ வழிகள் ஏது 

     

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.