Friday, February 1, 2013

ஆறுமுகன் ஆனைமுகன்





ஆறுமுகன் ஆனைமுகன் தம்பியல்லவா
ஆதிசிவன் உந்தனுக்கு தந்தையல்லவா 
உலகையாளும் சக்தி 
உந்தன் அன்னை யல்லவா 
உன் மாமனோ அகிலத்தையே 
காக்கும் கண்ணபர மாத்மா அல்லவா
நீயும் என்ன சின்னவனா தந்தைக்கே 
பாடம் சொன்ன தனயன் அல்லவா  
சூரனையே வதம் செய்த சூரன் அல்லவா
(ஆறுமுகன்)    
நீயே ஒரு ஞானப்பழம் அல்லவா உனக்
கெதற்கு பாலும் பழமும் தேவையா
தேனும் பாலும் கலந்ததுண்னவா 
உன் திருவடியில் எத்தனை பேர் எண்ணவா
தெருவினிலே எத்தனை பேர் தெரியுமா 
அவர் திருவயிறு தினம் பாடல் பாடுமே 
இதை அறியாத சிறுவனா நீ அண்ணலே 
அவர் திருவாய்க்கு கொடுக்க வேண்டும் உண்ணவே 
(ஆறுமுகன்)
   ஆறுகாலப் பூஜை உனக் கவசியம் தானா
உன் அன்பரெல்லாம் தவிக்கிறாரே 
அலட்சியம் தானா யாரும் உன்னை
 கேட்கவில்லை என்ற எண்ணமா 
உன்னை இன்னும் யாரும் 
அங்கு கேட்க வில்லையா எந்தனுக்கு
     உன்னை கேட்க உரிமை இல்லையா    
(ஆறுமுகன்)
ஒட்டு மொத்த உறவுகளும் 
சிதறிக் கிடக்குது தமிழும் சைவமும்
 உலகெங்கும் பரவிக்கிடக்குது
உன் பக்தியும் புகழும் ஓங்கிக் கிடக்குது 
கோவில்கள் கோபுரமும் உயர்ந்து கிடக்குது 
நம் உள்ளம் மட்டும் இன்னும் 
இங்கு வாடி கிடக்குது   
(ஆறுமுகன்)
வாய்ப்புகள் வராதா வழிகள் 
பிறக்காதா முருகா பிறக்காதா 
விடிவுகள் கிடைக்காதா உன்
 வருகையினால் வரும் பெரும் பேறு
 நீ வருவது இல்லையே ஏன் கூறு 
தேவர்கள் அழைத்தால் தான் 
வருவாயோ நீ கலியுகத்தில் கால் 
வையையோ முருகா உன் 
திருப்பாதம் இங்கு பதியாதோ  
(ஆறுமுகன்)

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.