துதிக்கின்றேன் உன்னையே நான் தூயவனே துணைநிற்க
தோகைமயில்
வாகன னேவா
பதிபூசை செய்துன்றன் பதமலரரைப் போற்றிடுவேன்
பழிநீங்க
வருள்வாய் கந்தா
மதியற்றுக் கிடந்தாலும் மடியேந்தி எனைநீயும்
மகிழ்வாகக்
காக்க வாராய்
விதியென்று என்னை நீ வெறுக்காமல் விரைந்தோடி
வினைகளையும்
களைய வாராய்
நிலையான
நின்னோடு நினைவாக நிழலாக
நிற்கின்ற
நிலைமை வேண்டும்
இலையென்று சொல்லாத ஈயென்று கேளாத
இணையில்லாத்
திறமும் வேண்டும்.
உலையாற உயிர்களுக்கு உணர்வோடே உணவளிக்க
உதவுகின்ற
உள்ளம் வேண்டும்
சிலைபோல நில்லாத சீயென்று சொல்லாத
தெளிவான
சிந்தை வேண்டும்
மாலவனே மாண்புள்ள மான்பிள்ளை மணந்தவுனை
மறவாத
தன்மை வேண்டும்
பாலனென வந்தெமது பகைமுடித்த பெருமானே
பகையின்றி
வாழ வென்றும்
வேலேந்தி சூரனுடன் வீரமுடன் போர்செய்து
விதிமுடித்த சூரனே வாராய்
பாலாறும் நீயிங்கு பழச்சோலை தானிங்கு
பசியாறிச்
செல்ல வாராய்
அலையோடு உறவாகி அதிலாறு முகமாகி
அறுமுகன்
ஆன பேறே
மலையாள மகிழ்வோடு மனம்நாடிச் சென்றங்கு
வழுவாமல் வாழ்ந்த வேலா
பலதுன்பம் பரவாமல் பழியேதும் நேராமல்
பதிபாலன்
எம்மைக் காப்பாய்
மலர்ப்பாதம் தொழுகின்றேன் மனமொன்றி உரைக்கின்றேன்
மங்கை யென்றன் மனத்துள் சேர்வாய் !
அதிகாலையில் மங்கலகரமாக -
ReplyDeleteமயில் வாகனனின் அழகு தரிசனம்!..
வாழ்க நலம்!..
வாருங்கள் சகோ! உடன் வருகையுடன் இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். மங்களம் உண்டாகட்டும் மிக்கநன்றி சகோ !
Deleteஉங்களுக்கு இட்ட பதில் எப்படி கீழே போச்சு தெரியலையே ம்..ம்
வணக்கம் சகோ !
ReplyDeleteசும்மா அள்ளுது மனதை அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
வாங்க பாவலரே !அட பாவலர் சொன்னா சரியாத் தான் இருக்கும். இதில உள் குத்து ஒன்றும் இல்லையே இல்ல சும்மா தான் கேட்டேன்பா. ஹா ஹா just kidding . இனிமையான கருத்தைக் கெட்க மனம் பூரித்து விட்டது நன்றி நன்றி ! வாழ்த்துக்கள் ...!
Deleteவாருங்கள் சகோ! உடன் வருகையுடன் இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். மங்களம் உண்டாகட்டும் மிக்கநன்றி சகோ !
ReplyDelete/இலையென்று சொல்லாத ஈயென்று கேளாத இணையில்லாத் திறமும் வேண்டும்.
ReplyDeleteஉலையாற உயிர்களுக்கு உணர்வோடே உணவளிக்க உதவுகின்ற உள்ளம் வேண்டும்/
அருமையான வரிகள்!!
சிலைபோல நில்லாத சீயென்று சொல்லாத
தெளிவான சிந்தை வேண்டும்
வாங்க தோழி ! தங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ! வாழ்த்துக்கள்
Deleteஎல்லாம் வேண்டிக் கொண்டே இதுவுமா/இலையென்று சொல்லாத ஈயென்று கேளாத/ வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் !வாங்கையா எப்படி இருக்கிறீர்கள். காசா பணமா இல்லை தானே வஞ்சகம் இல்லாமல் கேட்க வேண்டிய தெல்லாம் கேட்டிடலாம். தருவதும் தாரததும் அவரைப் பொறுத்தது. ஹா ஹா ...என்ன நான் சொல்கிறது
Deleteமுருகனின் துதிப்பாடலும், தரிசனமும் மிக அருமை.
ReplyDeleteமிக்கநன்றி தோழி வருகைக்கும் கருத்திற்கும்.
Delete.
முருகன் துதி மனதிற்கு மிக இனிமையும்
ReplyDeleteசொல்லமுடியா அமைதியையும் தருகிறது!
அருமை! வாழ்த்துக்கள் தோழி!
வாங்கம்மா என்அன்புத் தோழியே! sorry பாவலரே ஹா ஹா ... ஓடி வந்து இட்ட கருத்தில் உள்ளம் குளிர்ந்த தும்மா. மேலும் எழுத ஆர்வமும் பிறக்கிறது. நன்றிம்மா வாழ்த்துக்கள் ....!
Deleteஅருமை ! அருமை !மனத்தைக் கொளையடிக்குது பாடல் மேலும் மேலும் இது போன்ற பாடல்கள் தொடர வாழ்த்துக்கள் தோழி .
ReplyDeleteமிக்க நன்றி தோழி! தங்கள் அன்பான வருகைக்கும் இனிய கருத்திற்கும்.
Deleteதோகை மயில் வாகனன் நமக்காக வருவார். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி! சகோ வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துக்கள் ...!
Deleteஅழகான பா வரிகள்,,
ReplyDeleteஅருமை அருமை
வாழ்த்துக்களம்மா,,
மிக்க நன்றி !வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துக்கள் மா.
Deleteபாடல் பதிவர் போட்டிக்கான பாடலா என்பதைத் தெரிந்து கொண்டு தான் பாடவேண்டும்.
ReplyDeleteபாடலை
ஜோன்புரி ராகத்தில் அமைத்த போது நன்றாக இருக்கிறது.
முருகா, சற்று பொறுத்திரு.
பாடி முடிந்தவுடன் பஞ்சாமிர்தம் வழங்குவாய்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
வணக்கம் தாத்தா .! இது போட்டிக்கான பாடல் அல்ல தாத்தா அதுவும் இல்லாமல் போட்டிகள் தான் முடிவடைந்து விட்டனவே. ஆகையால் நீங்கள் பாடலாம் தாத்தா அசத்துங்கள் நன்றி காத்திருக்கிறேன். போன தடவை நான் கேட்கவில்லை அந்தப் பாடல் உங்கள் தளத்திலும் வரவில்லையே. நன்றி நன்றி ! வாழ்த்துக்கள் ...!
Deleteபோன பாடலையும் பாடத்தான் செய்தேன்.
Deleteஆனால் பதிவேற்றவில்லை.
செக்சன் 144 தடை உத்திரவு படி,
பதிவர் மா நாடு முடியும் வரை பதிவர் போட்டிக்கான பாடல்களை
வேறு எங்கும் பதிவு செய்யக்கூடாது என்று
இருந்ததால்,
சுப்பு தாத்தா.
நல்ல பாடல் வரிகள் சகோ வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி! சகோ வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துக்கள் ...!
Deleteமுருகனருள் பூரணமாய் கிடைக்க வாழ்த்துக்கள்! அருமையான பாடல்! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி! சகோ வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துக்கள் ...!
Deleteஅருமை
ReplyDeleteமுருகள் அருள் கிட்டட்டும்
நன்றி சகோதரியாரே
மிக்க நன்றி! சகோ வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துக்கள் ...!
Deleteவணக்கம் அம்மா!
ReplyDeleteநித்தம் மெருகேறும் சந்தம் நிறைகின்ற
சித்தம் உருவாக்கும் சீர்
அருமை இனிமை மரபின் பயணம் தொடரட்டும்.
நன்றி
வாருங்கள் ஐயனே ! தங்களின் வருகையும் இனிமையான கருத்தும் கண்டு நெஞ்சம் நிறைந்தது நம்பிக்கையும் பிறக்கிறது . மிக்க நன்றி ! வருகைக்கும் இனிய கருத்திற்கும்.
Deleteகவிதையும் காட்சியும் அருமை சகோதரி.
ReplyDeleteமிக்க நன்றிம்மா ! வருகைக்கும் இனிய கருத்துக்கும்.
Deleteஅன்புள்ள சகோதரி,
ReplyDeleteகவிக்குயில் கூவும் பாடல் இனிமை கண்டு மயில் ஆடட்டும்! மயிலேறி விளையாடட்டும்...!
வாங்கையா நலம் தானே. அதுசரி கேட்டுவிட்டு ஆடுவதோடும் நின்று விடாது. எலோர்க்கும் அருளை தாரளமாக வழங்கட்டும் ஐயா. நிச்சயமா தங்களுக்கும் அருளுவார். நன்றி வாழ்த்துக்கள் ...!
Deleteபாடல் ஒலிக்கிறது.
ReplyDeleteஇங்கெல்லாம்.
www.subbuthathacomments.blogspot.com
www.kandhanaithuthi.blogspot.com
சுப்பு தாத்தா.
வாருங்கள் தாத்தா காதாரக் கேட்டு மகிழ்ந்தேன் அற்புதம் ஐயா. ஆனால் பதில் இடத் தாமதாமாகி விட்டது பொறுத்தாற்றுங்கள்
Deleteஐயா !மிக்க நன்றி ஐயா தொடர வாழ்த்துக்கள்.....!அந்த அமுருகனின் ஆசி என்று தங்களுக்கு உண்டு ஐயா....தங்கள் அன்புக்கும் நட்புக்கும் நான் தலை வணங்குகிறேன்.
தாமத வருகைக்கு மன்னிக்கவும். சந்தம் இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க.
ReplyDeleteஹா ஹா வாருங்கள் தோழி அதனால் என்னம்மா புரிகிறது.தாமதமாக வேனும் நீங்கள் வந்தே பெரிய விடயம். மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும் ....!
Deleteமுருகா!தமிழ்க்கடவுளே;இன்று இனியா மூலம் நற்றமிழ்க்கவிதை ஒன்று தந்தாய்
ReplyDeleteவாங்கய்யா மிக்க நன்றி ! வரவுக்கும் இனிய கருத்திற்கும் ....
Deleteசந்தத்தில் பொளந்து கட்டிக்கொண்டிருக்கின்றீர்கள் சகோ! அதுவும் தமிழ் கடவுளுக்கே! இப்படி எல்லாம் அழைத்தால் அவர் உங்கள் மனதிற்குள் வந்து குடியமராமல் போவாரா? அமர்ந்ததினால்தானே இப்படிப் பாடுகின்றீர்கள்!!!
ReplyDelete//மாலவனே மாண்புள்ள மான்பிள்ளை மணந்தவுனை //ஆஹா...
வாங்க சகோ! நீண்ட நாளின் பின் தங்களை சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி வரவுக்கும் இனிய கருத்திற்கும்.
Delete
ReplyDelete"அலையோடு உறவாகி அதிலாறு முகமாகி
அறுமுகன் ஆன பேறே" என்ற - அந்த
முருகனைக் கண் முன்னே காட்டுகிறீர்!
http://www.ypvnpubs.com/
மிக்க நன்றி சகோ வரவிற்கும் கருத்திற்கும்...!
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
அழகாக பா புனைந்து நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் படமும் கருத்தும் சிறப்பு.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்! மிக்க நன்றி வரவிற்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்.
Deleteவரிகள் அருமை சகோதரி வாழ்த்துகள்
ReplyDelete